125வது மன்னர் அகிஹிட்டோ மகனான நருஹிட்டோ ஜப்பானின் 126வது மன்னராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஜப்பானின் 125வது மன்னர் அகிஹிட்டோ வயது மூப்பு மற்றும் உடல் நல குறைவால் தனது பதவியை விட்டு விலகினார். இதையடுத்து அவரது மூத்த மகனான நருஹிட்டோ ஜப்பானின் 126வது மன்னராக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதற்கான சடங்குகள் நேற்று தொடங்கியது. இந்நிலையில், இன்று டோக்கியோ இம்பீரியல் அரண்மனையில், 126-வது ஜப்பான் மன்னராக புதிய மன்னராக அகிஹிட்டோ மூத்த மகனான பட்டத்து இளவரசர் நருஹிட்டோ சம்பிரதாயப்படி பதவியேற்றார்.