எகிப்து நாட்டை சேர்ந்த 29 வயதான ஹனா மொஹமட் ஹசன், தனது மகன் யூசுப்பை திட்டமிட்டு கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ஆயுதத்தால் சிறுவனின் தலையில் மூன்று முறை தாக்கி அவனை கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதாரங்களை அகற்றுவதற்காக அவர் அவனது உடலை வெட்டியுள்ளார். ஆனால் அவர் உடல் பாகங்களை புதைப்பதற்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
கொலை செய்தது ஏன்?
அவர் தனது மகனின் தலை மற்றும் பிற சதை பகுதிகளை அடுப்பில் வைத்து கொதிக்கும் நீரில் சமைத்ததாக அதிர்ச்சி தகவலும் கூறப்படுகிறது. இச்சம்பவம் கடந்த ஏப்ரல் மாத இறுதியில் நடந்துள்ளது. வீட்டில் இருந்த உறவினர் ஒருவர் உடல் உறுப்புகளை வாளிகளில் பார்த்ததை அடுத்து குற்றம் வெளிச்சத்திற்கு வந்தது. ஹசன் தனது முன்னாள் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மகன் யூசுப்புடன் தொடர்பில் இருப்பதை தடுக்க அல்லது சட்டப்பூர்வமான உரிமைகளைப் பின்பற்றுவதைத் தடுக்க அவரது மகனைக் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | உலகத்திலேயே பெரிய பணக்காரர் பட்டத்தை எலோன் மஸ்கிடம் தொலைத்த பெர்னார்ட் அர்னால்ட்
அதிர்ச்சி வாக்குமூலம்
விசாரணையில், ஹசன் நல்ல மனநிலையுடன் இருப்பதாகவும், மன நிலையை பாதிக்கும் எந்த ஒரு பொருளையும் அவர் உட்கொள்ளவில்லை என்பதும் உறுதியானது. அதிர்ச்சியூட்டும் வகையில், தனது மகன் என்றென்றும் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே மகனின் தலையின் ஒரு பகுதியை தான் சாப்பிட்டதாக ஹசன் எகிப்து காவல்துறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் பிரிந்துவிட்டதாகவும், ஹசனின் முன்னாள் கணவர் சமரசம் செய்ய முயன்றாலும், அவரைத் தங்கள் குழந்தையிடம் இருந்து ஹசன் ஒதுக்கி வைத்துள்ளார். அவர் மீது பகைமையை வளர்க்கவும் ஹசன், தனது மகனிடம் வலியுறுத்தினார். ஹாசனுடன் அவரின் மகன் இருக்கும் ஒரே காரணத்தால் தான் அவரின் கணவர் தொடர்ந்து அவர்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்து வந்துள்ளார்.
பழிவாங்கல்
இருப்பினும், ஹசன் தனது மகனை கணவனிடம் இருந்து அந்நியப்படுத்தியுள்ளார். முன்னாள் கணவன் மீது வெறுப்பைத் தூண்டியுள்ளார். மேலும், அவரது மகனை பார்ப்பதே, அவரின் கணவருக்கு கடினமாக இருந்துள்ளது. ஹசனின் கணவர் தனது மகனின் நல்வாழ்வை உறுதிப்படுத்த ஹசனின் குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். இருப்பினும், கணவரை பழிவாங்கவே இந்த கொலையை செய்ததாக ஹசன் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | Squid Game: விளையாட்டு தெரியாமலேயே ரூ.11.5 லட்சம் பரிசுத் தொகையை வென்ற தமிழர்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ