ஜூலை 7 முதல் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் வரவேற்கத் தயாராகும் Dubai

சுற்றுலாப் பயணிகளை வரவேற்க துபாய் (Dubai) மீண்டும் தயாராக உள்ளது. ஜூலை 7 முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் துபாய்க்கு வருவதற்கான அனுமதி கொடுக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 22, 2020, 10:19 PM IST
  • சுற்றுலாப் பயணிகளை வரவேற்க துபாய் (Dubai) மீண்டும் தயாராக உள்ளது.
  • சுற்றுலாப் பயணிகளுக்கு சர்வதேச சுகாதார காப்பீடு இருக்க வேண்டியது கட்டாயம்.
  • COVID-19 தொற்று இல்லை என்ற சான்றிதழை துபாய்க்கு வருபவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • துபாய்க்கு பயணம் மேற்கொள்வதற்கு 96 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா பரிசோதனை கட்டாயம்.
ஜூலை 7 முதல் சுற்றுலாப் பயணிகளை மீண்டும் வரவேற்கத் தயாராகும் Dubai title=

புதுடெல்லி: சுற்றுலாப் பயணிகளை வரவேற்க துபாய் (Dubai) மீண்டும் தயாராக உள்ளது. ஜூலை 7 முதல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் துபாய்க்கு வருவதற்கான அனுமதி கொடுக்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது. மேலும், துபாயில் வசிப்பதற்கான விசா வைத்திருக்கும் வெளிநாட்டினர் ஜூன் 22 முதல் திரும்புவதற்கும் அனுமதி கொடுக்கப்படுவதாக துபாயின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. 

பாரசீக வளைகுடாவின் கரையோரத்தில், அரேபிய பாலைவனத்தில் அமைந்துள்ள துபாய், கடல் மட்டத்திலிருந்து 16 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதன் மொத்த நிலப்பரப்பளவு 1,588 சதுர மைல் ஆகும்.

கொரோனா வைரஸ் (Coronavirus) பெருந்தொற்று பரவியதை அடுத்து, ​​துபாய் சுற்றுலாப் பயணிகளின் வருகைக்குத் தடைவிதித்தது.  தற்போது உலகம் முழுவதும் கொரோனாவுக்கு (COVID-19) எதிரான கடுமையான நடவடிக்கைகளில் தளர்வு கொடுக்கப்படும் நிலையில், மீண்டும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க புத்துணர்வுடன் தயாராகிறது துபாய்.  பயணிகளுக்காக ஒரு நெறிமுறை பட்டியலையும் அரசு வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளை அனைவரும் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.

ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பயணிகள் உறுதியாக பின்பற்ற வேண்டும் என்று அரசாங்கம் தெளிவாகக் கூறிவிட்டது. அதோடு, அண்மையில் பெறப்பட்ட COVID-19 தங்களுக்கு இல்லை என்ற சான்றிதழை துபாய்க்கு வருபவர்கள் கொடுக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.  இல்லையென்றால், துபாய் விமான நிலையத்தில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.  அங்கு யாருக்காவது கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவார்கள். துபாய்க்கு பயணம் மேற்கொள்வதற்கு 96 மணி நேரத்திற்கு முன்னர் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Read Also |  அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு ஆபத்து; விரைவில் விசா நடைமுறையில் மாற்றம்!

சுற்றுலாப் பயணிகளுக்கு சர்வதேச சுகாதார காப்பீடு இருக்க வேண்டியது கட்டாயம்  என்றும், அவர்கள் ஒரு சிறப்பு மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் துபாய் நிர்வாகம் கூறுகிறது. அந்த சிறப்பு செயலியில்  பயணிகள் தொடர்பான அவர்களின் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்யவேண்டும். அத்துடன், தங்கள் உடல்நலம் தொடர்பான அறிவிப்பு படிவத்தையும் நிரப்ப வேண்டும். ஞாயிற்றுக்கிழமையன்று துபாய் அரசு வெளியிட்ட இந்த அறிவிப்பில், ஜூன் 23 செவ்வாய்க்கிழமை முதல் உள்ளூர்வாசிகள் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

துபாய் மக்கள் தொகையில் சுமார் 85 சதவிகித மக்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், பெரும்பாலானவர்கள் வேலைவாய்ப்புக்காக ஆசிய நாடுகளில் இருந்து செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளே துபாயின் பொருளாதாரத்தின் அடிப்படை என்று சொல்லலாம்.  சொகுசு நகரம் என்று கூறப்படும் துபாயில் பல தெருக்களில் கூட ஏசி வசதிகள் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Read Also | பாகிஸ்தானில், பங்களாதேஷ் விசாக்கள், விமானங்கள் ரத்து...தென் கொரியா அதிரடி முடிவு   

துபாயின் புர்ஜ் கலீஃபா (Burj Khalifa) என்ற வானளாவிய கட்டடம், உலகின் மிக உயரமான டென்னிஸ் கோர்ட்டானது, ஆடம்பரமான பூர்ஜ் அல் அராப் என்ற ஹோட்டலின் மாடியில் கட்டப்பட்டுள்ளது என்பதும், சில நேஅங்களில் அது ஹெலிபேடாக பயன்படுத்தப்படுகிறது என்பதும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் தகவல். துபாயில் கடுமையான வெப்பம் நிலவுவதால், பேருந்து நிறுத்தங்கள் அனைத்திலும் காற்று கட்டுப்படுத்தப்படு, கண்ணாடியால் மூடி வெப்பம் கட்டுப்படுத்தப்படுகிறது.

Trending News