உலகளவில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்!
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இடையே 25-ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த வட அமெரிக்கா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய கடந்த ஆண்டு உடன்பாடு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் ‘வரிவிதிப்பு ராஜா’ (இந்தியா) அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.
மேலும் வரிவிதிப்பு ராஜா என இந்தியாவை அழைத்ததற்கான காரணம் என்ன? என்று விளக்கிய அவர், அமெரிக்க பொருட்களுக்கு மிக மிக அதிகமாக இந்தியா வரிவிதிக்கிறது. இது அமெரிக்காவுக்கு தடையாக உள்ளது அதனால் தான் இந்தியாவை வரிவிதிப்பு ராஜா என அழைத்தேன் என்றார்.
அமெரிக்கவின் தயாரிப்புகளுக்கு 100% இந்தியா வரி விதிப்பாதக குறிப்பிட்ட அவர், ஹார்லி டேவிட்சன் போன்ற தயாரிப்புகளுக்கு 100% இந்தியா வரி விதிப்பதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக இந்த ஆண்டு முற்பகுதியில் வெள்ள மாளிகை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் ட்ரம்ப், ஹார்லி டேவிட்சன் தயாரிப்புகளுக்கு இறக்குமதி வரி 100%-லிருந்து 50%-மாக குறைக்கப்பட்டுள்ளது. இதனை தான் வரவேற்பதாக தெரிவித்தார். ஆனால் தற்போது 100% வரி விதிக்கப்படும் பொருட்களின் ஹார்லி டேவிட்சன் தயாரிப்புகளை ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் வரி விதிப்பை விமர்சிக்கும் விதமாக 'இந்தியா வரிவிதிப்பின் ராஜா ' என்ற வார்த்தையை மீண்டும் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.