நியூடெல்லி: கைலசா என்ற தனது தனி நாட்டை, அமெரிக்கா, இறையாண்மை கொண்ட நாடாக அமெரிக்கா அங்கீகரித்துவிட்டதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். அமெரிக்கா தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரபூர்வமான தகவலும் வெளியாகாத சூழலில், நகர மேயர் ஒருவரோடு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் சமூக ஊடகங்களில் இந்த தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றன.
The United States of America signs bilateral agreement with United States of KAILASA#Kailasa #Newark #NJ #Bilateral #USA #Nithyananda pic.twitter.com/PjGd4cemZb
— KAILASA's SPH Nithyananda (@SriNithyananda) January 12, 2023
தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தா, கர்நாடகாவில் பெங்களூரு அருகே பிடதியில் ஆசிரமம் நடத்தி வந்தவர். அவர் மீதான பல குற்றச்சாட்டுக்களில், குழந்தைகள் கடத்தல், பாலியல் தொந்தரவு ஆகியவை அவர் மீதான விமர்சனங்களை எழுப்ப, சர்ச்சைக்குரிய அந்தரங்க வீடியோ ஒன்று வெளியானதால், அவருக்கு நெருக்கடி அதிகரித்தது.
அதையடுத்து, வேறு பல வழக்குகளும், சர்ச்சைகளும் வர, வேறு வழியில்லாமல், தலைமறைவானார் நித்தியானந்தா. தலமறைவான நிலையில், தான், கைலாசா எனும் புதிய நாட்டை வாங்கி விட்டதாகவும் தனது நாடு, இந்துக்களின் புனித பூமியாக இருக்கும் என கூறி சமூக ஊடகங்களில் பதிவிட்டார். அதன் தொடர்ச்சியாக, கடந்த சில ஆண்டுகளாக பக்தர்களுக்கு நேரில் காட்சியளிக்காமல் ஆன்லைன் வழியாகவே சொற்பொழிவுகளை வழங்கிவந்தார்.
மேலும் படிக்க | Makar Sankranti: மகர சங்கராந்தி ராசிபலன்கள்: சமூக அந்தஸ்து அதிகரிக்கும் ராசிகள்
கைலாசாவை அமெரிக்கா அங்கீகரித்தது என்று நித்தியானந்தா சொன்னாலும், கைலாசா எங்கு இருக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில் கைலாசாவை அமெரிக்கா அங்கீகரித்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நித்யானந்தா தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு நாடுகளுக்கும் இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க் நகர மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் மரபுபடி அந்நாட்டுடன் வேறு ஒரு நாடு ஒப்பந்தம் மேற்கொள்கிறது எனில் அந்நாட்டின் தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்படும். அந்த வகையில் நெவார்க் நகர மண்டபத்தில் கைலாசாவின் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மகர சங்கராந்தி மற்றும் பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு, நித்தியானந்தா, பக்தர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, அவர்களுடன் இணைந்து 2023ஆம் ஆண்டின் பொங்கலை கொண்டாட அழைப்பு விடுத்துள்ளார்.
Celebrate Pongal with the SPH Nithyananda Paramashivam! #Pongal #Tamil #MakarSankranti #लोहड़ी #Uttarayan pic.twitter.com/Ou0sfGqIMM
— KAILASA's SPH Nithyananda (@SriNithyananda) January 13, 2023
நித்தியானந்தா என்ற டிவிட்டர் கணக்கில் இருந்து பொங்கல் வாழ்த்துக்களும், பொங்கல் கொண்டாட அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Budget 2023: சாமானியர்களுக்கு பம்பர் பரிசு, காப்பீட்டு வரிமுறையில் மாற்றம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ