புனிதமான ஸ்வஸ்திக் சின்னத்தின் பெயரை மாற்ற மறுத்த அமெரிக்க கிராமம்

இந்து கலாச்சாரத்தில் ஸ்வஸ்திக் சின்னம் மங்கலகரமானதாக கருதப்படுகிறது. எந்தவொரு காரியத்தையும் செய்யும்போது ஸ்வஸ்திக் சின்னம் போட்டு தொடங்கப்படுவது வழக்கம்.  ஆனால், அமெரிக்காவில் 'Swastik' என்ற கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 25, 2020, 10:35 PM IST
  • நாஜிக் கட்சி, ஸ்வஸ்திக் வடிவத்தைத் தங்களது கட்சியின் சின்னமாக வைத்திருந்தது...
  • இந்துக்களின் கலாசாரத்தில் ஸ்வஸ்திக் சின்னம் மங்கலமானது
புனிதமான ஸ்வஸ்திக் சின்னத்தின் பெயரை மாற்ற மறுத்த அமெரிக்க கிராமம் title=

இந்து கலாச்சாரத்தில் ஸ்வஸ்திக் சின்னம் மங்கலகரமானதாக கருதப்படுகிறது. எந்தவொரு காரியத்தையும் செய்யும்போது ஸ்வஸ்திக் சின்னம் போட்டு தொடங்கப்படுவது வழக்கம்.  ஆனால், அமெரிக்காவில் 'Swastik' என்ற கிராமத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். அமெரிக்க மக்கள் இதை நாஜி ஆட்சியின் வன்முறை மற்றும் கொடுங்கோலுடன் தொடர்புபடுத்துகிறார்கள். இதனால், கிராமத்தின் பெயரை மாற்றவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன. 

அமெரிக்காவின் நியூயார்க்கில் ' 'Swastik' என்ற பெயரில் ஒரு கிராமம் உள்ளது. பெயரை மாற்றுவதற்கு கணிசமான அளவில் ஆதரவு இருந்தபோதிலும், அதன் சபை பெயரை மாற்ற வேண்டாம் என்று கிராம சபை ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

ஸ்வஸ்திக் சின்னத்தில், ஒன்றையொன்று அவற்றின் நடுப்பகுதியில் செங்குத்தாக வெட்டும் ஒரேயளவான இரண்டு கோடுகள் இருக்கும்.  நியூயார்க்கின் பிளாக் புரூக் நகரத்தின் கீழ் வரும் இந்த கிராமம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஸ்வஸ்திக் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. ஆனால் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த பயணி மைக்கேல் அல்காமோ, இந்த பெயர் அருகிலுள்ள இரண்டாம் உலகப் போரின் தியாகிகளின் கல்லறைகளுக்கு அவமானம் என்று கூறினார். அதன் பிறகு, நகர சபை உறுப்பினர்கள் பெயரை மாற்ற வாக்களித்தனர்.

கிராமத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக செப்டம்பர் 14 அன்று கூடிய கிராம சபை உறுப்பினர்கள், கலந்தாலோசனை செய்த பிறகு, பெயரை மாற்ற வேண்டாம் என்று ஒருமனதாக முடிவு செய்தனர்.

பிளாக் ப்ரூக் நகரத்தின் உயரதிகாரி ஜான் டக்ளஸ் ஒரு மின்னஞ்சலில் இவ்வாறு எழுதியுள்ளார்: 'எங்கள் சமூகத்தின் வரலாறு தெரியாத பகுதிக்கு வெளியே உள்ளவர்கள், கிராமத்தின் பெயர் அவமானம் தருவதாக நினைத்ததற்கு வருந்துகிறோம். இந்த பெயர் எங்கள் முன்னோர்கள் வைத்தது. அதை மாற்ற வேண்டாம் என்று ஒருமனதாக முடிவு செய்கிறோம்'.

ஸ்வஸ்திக் சின்னம் நாஜி கட்சியுடன் இணைத்து பார்க்கப்படுவதன் காரணம் என்ன?  

1920 ஆம் ஆண்டில் நாஜிக் கட்சி, ஸ்வஸ்திக் சின்னத்தின் வடிவத்தைத் தங்களது கட்சியின் சின்னமாக வைத்தார்கள். 1933 ஆம் ஆண்டில் அடோல்ஃப் இட்லர் ஜெர்மனியின் ஆட்சியைப் பிடித்த பின்னர், அந்நாட்டில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சின்னம் ஆனது ஸ்வஸ்திக். 1935 ஆம் ஆண்டில் ஸ்வஸ்திக் இடம் பெற்றிருந்த நாஜிக் கட்சியின் கொடி, ஜெர்மனியின் கொடி ஆக்கப்பட்டது. இதனையடுத்து 1930களில், ஸ்வஸ்திகா சின்னத்தை நாசிசம், பாசிசம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக மேற்கத்திய நாடுகள் கருதின. தற்போதும் ஸ்வஸ்திக் சின்னம் மேற்கத்திய நாடுகளில் இகழ்ச்சிக்கு உரிய சின்னமாகவே பார்க்கும் போக்கு நிலவுகிறது. 

1930 களில் இருந்து சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லர் மற்றும் அவரது நாஜி கட்சியுடன் தொடர்புடையதாக ஸ்வஸ்திக் சின்னம் பார்க்கப்படுகிறது. ஆனால் கிராமத்தின் பெயர் வரலாறு மிகவும் பழமையானது. ’நலமாக இருப்பது’ என்ற பொருள் தரும் ஸ்வஸ்திக் என்ற சமஸ்கிருத வார்த்தையின் அடிப்படையில் இந்த கிராமத்திற்கு பெயரிடப்பட்டது.  
"இந்த கிராமத்தில் வசித்தவர்களும் இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஸ்வஸ்திக் என்ற வார்த்தையின் அர்த்தத்தை ஹிட்லரை அடிப்படையாகக் கொண்டு தவறாக சித்தரிக்க முயன்றதால் மட்டுமே மக்கள் கிராமத்தின் பெயரை மாற்ற மறுத்துவிட்டனர்" என்று டக்ளஸ் கூறினார்.

Trending News