வங்காளதேசத்தை தாக்கியது மோரா புயல் -மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

Last Updated : May 30, 2017, 11:12 AM IST
வங்காளதேசத்தை தாக்கியது மோரா புயல் -மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் title=

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மோரா புயல் இன்று வங்காளதேசத்தை தாக்கியது. 

இன்று காலையில் வங்கதேசத்தின் பிரபல துறைமுக நகரான சிட்டகாங் நகருக்கும் கோக்ஸ் பஜாருக்கும் இடையே  புயல் கரையைக் கடந்ததாக வங்கதேச வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

புயல் கரையை கடந்ததையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏற்கெனவே அதிகாரிகள் கரையோரப் பகுதிகளில் இருந்த 3 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். புயல் கரையை கடக்கும் போது 117 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. கனமழையும் பெய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புயலால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. மீட்பு பணிகளுக்காக ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். மருத்துவர்களுக்கான விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Trending News