JULY 19 Worldwide Corona Update: உலக அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம்

உலகளவில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,43,01,124; இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,02,315; குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80,35,377.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 19, 2020, 11:25 PM IST
  • உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,43,01,124
  • உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,02,315
  • உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80,35,377
JULY 19 Worldwide Corona Update: உலக அளவில் கொரோனா பாதிப்பு அண்மை நிலவரம் title=

புதுடெல்லி: உலகளவில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,43,01,124 உலகளவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,02,315. உலகளவில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 80,35,377

COVID-19 நோய்த்தொற்று பரவ தொடங்கியதிலிருந்து பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.  

இந்தியாவில் இதுவரை மொத்தமாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,77,618 ஆகவும், அதிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 6,77,423 ஆகவும், பலி எண்ணிக்கை 26,816 ஆகவும் உயர்ந்துவிட்டது.

தமிழகத்தில்  இன்று 4549 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 1157 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று தமிழகத்தில் 5106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இறப்பு எண்ணிக்கையை பார்த்தால் 69 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனாவுக்கான தமிழக அரசின் பிரத்யேக தொலைபேசி உதவி எண்கள்:

1800 120 555550; 044 – 29510400, 044 – 29510500; 044 – 24300300, 044 – 46274446; 9444340496, 8754448477

Also Read | என்ன கொசு கடிச்சா கொரோனா வைரஸ் பரவுமா? வெளியான பகீர் தகவல்....

கொரோனா நோய்த்தொற்றால் இதுவரை 25 மில்லியன் ஈரானியர்கள் பாதிக்கப்பட்டுள்ளது கவலையளிப்பதாக அந்நாட்டு அதிபர் ரூஹானி தெரிவித்தார்.

COVID-19 நோய்த்தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் தென்னாப்பிரிக்கா ஐந்தாவது இடத்திற்கு முந்திச் சென்றது.

எல் சால்வடார், தனது பொருளாதாரத்தை இரண்டாம் கட்டத்திற்கு நகர்த்த ஜூலை 21 முதல் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தவுள்ளது

ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத் தலைநகர் மெல்போர்னில் வசிப்பவர்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவிப்பு

கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் அடிப்படையில் வெளியிடப்படும் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் பத்து நாடுகள்:

1. அமெரிக்கா - 37,11,413

2. பிரேசில் - 20,74,860

3. இந்தியா - 10,77,781

4. ரஷ்யா - 7,64,215

5. தென்னாப்பிரிக்கா - 3,50,879 
 
6. பெரு- 3,49,500 

7. மெக்சிகோ - 3,38,913

8. சிலி - 3,28,846

9. இங்கிலாந்து - 2,95,632

10. இரான் - 2,71,606

Trending News