Tsunami: சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்கா! அணுக முடியாததால் அதிகரிக்கும் கவலைகள்

பசிபிக் தீவு நாடான டோங்கா அருகே நீருக்கடியில் எரிமலை வெடித்ததில் சுனாமி ஏற்பட்டது... தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் சேத நிலவரம் தெரியவில்லை, புகைமூட்டங்கள் கவலைகளை அதிகரித்துள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 18, 2022, 08:48 AM IST
  • கடலுக்கடியில் எரிமலை வெடிப்பு
  • டோங்காவில் சுனாமி
  • உலகில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள நாடு
Tsunami: சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்கா! அணுக முடியாததால் அதிகரிக்கும் கவலைகள் title=

சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்கா உலகிடம் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு பசிபிக் தீவு நாடான டோங்கா அருகே நீருக்கடியில் எரிமலை வெடித்ததில் சுனாமி ஏற்பட்டது.

சுனாமியால் ஒருவர் இறந்துள்ளதாக கூறப்பட்டது. டோங்காவின் மேற்குக் கடற்கரையில் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான நிலையம் (International Airport) மூடப்பட்டுள்ளது மற்றும் உலகுடனான அந்நாட்டின் தகவல் தொடர்பு இணைப்புகள் தடைபட்டுள்ளது கவலைகளை அதிகரிக்கிறது.  

பிரிட்டனை சேர்ந்த 50 வயது ஏஞ்சலா குளோவர் (50) சுனாமியில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையம் புழுதியால் மூடப்பட்டுள்ளதாகவும், புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

ALSO READ | அபுதாபியில் எண்ணெய் டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல்

சுனாமியால் பாதிக்கப்பட்ட தீவு, உலகிடம் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளதால், இறப்பு எண்ணிக்கை (Death Toll) குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதுவும் வெளிவரவில்லை.

ஹஅபாய் தீவுகளின் குழுவில் உள்ள நோமுகா தீவில் பேரழிவு சமிக்ஞை கண்டறியப்பட்டதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

எரிமலையால் ஏற்பட்ட பாதிப்புகளையும் நிராகரிக்க முடியாது என்று ஐ.நா மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்புக் குழு (UN humanitarian affairs coordination group) தெரிவித்துள்ளது. 

சேதம் பற்றி இன்னும் எதுவும் தெரியாத நிலையில், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் சேதத்தை மதிப்பிடுவதற்காக கண்காணிப்பு விமானங்களை கடற்கரைகளுக்கு அனுப்பியுள்ளன.

ALSO READ | கொரோனாவுக்கும் ஒமிக்ரானுக்கும் தொடர்பு இல்லை! இது வேறொரு தொற்று!

எரிமலையால் ஏற்பட்ட சேதம் "குறிப்பிடத்தக்கது" என்று நியூசிலாந்தின் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறினார், பிரெஞ்சு அரசாங்கமும் உதவுவதாக உறுதியளித்துள்ளது.

நியூசிலாந்து தனது C-130 விமானத்தை டோங்காவிற்குள் அனுப்பத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. அதேபோல, ஆஸ்திரேலியா தனது கடற்படைக் கப்பலான HMAS அடிலெய்டை  (HMAS Adelaide) தயார் நிலையில் வைத்துள்ளது.

சுனாமி அலையின் தாக்கம் அமெரிக்கா மற்றும் ஜப்பானில் வெகு தொலைவில் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது, பெருவில் உள்ள கடற்கரையில் இரண்டு பேர் நீரில் மூழ்கி இறந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. 

ஹங்கா-டோங்கா-ஹுங்கா ஹா'பாய் தீவு (island of Hunga-Tonga-Hunga Ha'apai), இந்த சுனாமியால் கிட்டத்தட்ட அழிந்துவிட்டதாக செயற்கைக்கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.

டோங்கன் தலைநகர் நுகுஅலோபா (capital Nuku'alofa) சாம்பலால் மூடப்பட்டுள்ளதாகவும், தகவல் தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறும் அறிக்கைகள் கவலைகளை அதிகரிக்கின்றன.  

ALSO READ | இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் இந்தியரா? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News