இன்றைய காலகட்டத்தில், கோகோ கோலா என்பது கிட்டத் தட்ட அனைவருக்கும் அறிமுகமாகியுள்ள ஒரு குளிர் பானம். ஆனால் குளிர்பானமாக தயாரிக்கப்பட்டது என்று தாம் நாம் அனைவரும் நினைத்திருப்போம். ஆனால், இந்த பானம் பார்மஸிஸ்டாக பணிபுரிந்த காயமடைந்த சிப்பாய் ஒருவரால் தயாரிக்கப்பட்டது. பல வருட கடின உழைப்புக்குப் பிறகு, கோகோ கோலா ஃபார்முலா தயாரிக்கப்பட்டது. காயமடைந்த இந்த ராணுவ வீரர் தனது வலியைக் குறைக்க மருந்துகளை உட்கொண் நிலையில் படிப்படியாக போதைக்கு அடிமையானார்.
போதைப் பழக்கத்திலிருந்து விடுபட தயாரிக்கப்பட்ட கோகோ கோலா
கோகோ கோலா 1886 ஆம் ஆண்டு இதே நாளில் அதாவது 1886 ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி அட்லாண்டாவில் உள்ள மருந்தாளர் ஜான் பெம்பர்ட்டனால் உருவாக்கப்பட்டது. பெம்பர்டன் ஒரு சிப்பாய். ஆனால் அவர் பார்மஸி படித்திருந்தார். ஒரு போரின் போது அவர் படுகாயமடைந்தார். அவரது உடலில் பல காயங்கள் இருந்தன. வலியிலிருந்து நிவாரணம் பெற, அவர் போதை மருந்துகளை உட்கொள்ளத் தொடங்கினார். இராணுவ பணியையும் விட்டுவிட்டார். சில நாட்களுக்குப் பிறகு, அவரது காயங்கள் குணமடைந்தன.
ஆனால் போதைப் பொருளுக்கு அடிமையானார். இந்த போதை பழக்கத்திலிருந்து விடுபட, அதன் மாற்று வழிகளைத் தேடத் தொடங்கினார். பின்னர் அவரும் ஃபிராங்க் ராபின்சன் என்பவரும் இணைந்து ஒரு கெமிக்கல் கம்பெனியை ஆரம்பித்தனர். பெம்பர்டன் இங்கேயும் பானம் தாயாரிக்கும் வேலை செய்யத் தொடங்கினார். இறுதியாக, மே 1886 இல், பெம்பர்டன் ஒரு திரவத்தை உருவாக்கினார். அதில் சோடாவை சேர்த்து மக்களை பரிசோதித்தார். மக்கள் இந்த பானத்தை மிகவும் விரும்பினர்.
நிறுவனத்திற்கு பெயரிட்ட ஃபிராங்க் ராபின்சன்ர்
ஃபிராங்க் ராபின்சன் இந்த பானத்திற்கு கோகோ கோலா என்று பெயரிட்டார். இந்த கலவையில் கோரா கொட்டை முதல் கோகோ இலை வரை பல சேர்க்கப்பட்டது. கோகோ இலைகள் அடங்கிய சிரப்பின் செய்முறை சேர்க்கப்பட்டது. காஃபின் சேர்க்கப்பட்டது. இந்த பெயர்களை எல்லாம் இணைத்து, மக்களின் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் கொக்கோ கோலா என பெயரிட்டார்.
மேலும் படிக்க | Health Alert: சாப்பிட்ட பின் ஒரு போதும் செய்யக் கூடாதவை
தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 9 பாட்டில்கள்
கோகோ கோலா விற்பனைக்கான விலை கண்ணாடி ஒன்றுக்கு 5 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது. மே 8, 1886 இல், கோகோ கோலா முதன்முறையாக ஜேக்கப்ஸ் மருந்தகத்தில் விற்கப்பட்டது. ஆரம்பத்தில் அதன் விற்பனை மிகவும் குறைவாக இருந்தது. தினமும் 9 கிளாஸ் கோகோ கோலா மட்டுமே விற்பனையானது. இதனால், அந்நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிட்டது. முதல் வருடத்தில், செலவு $ 70, அதே நேரத்தில் வருவாய் $ 50 மட்டுமே.
இலவச Coca-Cola கூப்பன்கள் விநியோகம்
கோகோ கோலா ஃபார்முலா பெம்பர்டனுடன் நீண்ட காலம் நீடிக்கவில்லை. இந்த ஃபார்முலாவை 1887 ஆம் ஆண்டில் அட்லாண்டாவைச் சேர்ந்த மருந்தாளர் தொழிலதிபர் ஆசா கிரிக்ஸ் காண்ட்லர் $ 2300 விலையில் வாங்கினார். கோகோ கோலாவின் வணிகத்தை வெற்றியடையச் செய்ய கேட்லர் ஒரு யோசனையைக் கொண்டு வந்தார். மக்களை அடிமையாக்கும் வகையில் இந்த பானத்தின் கூப்பன்களை இலவசமாக விநியோகித்தார். இதற்குப் பிறகு, இந்த பானத்தின் சுவையை மக்கள் உணர்ந்தனர். அது உலகம் முழுவதும் பிரபலமானது.
மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
200 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள நிறுவனம்
போதை மருந்துகளுக்கு மாற்றாக தொடங்கப்பட்ட கோகோ கோலா நிறுவனம், உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது. இந்நிறுவனம் இந்த நாடுகளில் 900க்கும் மேற்பட்ட ஆலைகளைக் கொண்டுள்ளது. கோகோ கோலா நிறுவனம் 3900 வகையான பானங்களை உற்பத்தி செய்கிறது என்று நம்பப்படுகிறது.
மேலும் படிக்க | நரை முடி கருமையாக, முடி பளபளக்க இதை செய்தால் போதும்: சூப்பர் டிப்ஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR