கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை: சீனா 8-வது முறை சோதனை!

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணையை 8-வது முறையாக சோதனை செய்தது சீனா. 

Last Updated : Nov 21, 2017, 07:02 PM IST
கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை: சீனா 8-வது முறை சோதனை! title=

சீனா ‘டாங்பெங்-- 41’ என்ற ஏவுகணையை தயாரித்து 2012-ம் ஆண்டில் அதன் முதல் சோதனையை நடத்தியது. இந்த ஏவுகணை சுமார் 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது.

இந்த ஏவுகணையால் ஒரே நேரத்தில் 10 அணுகுண்டுகளை சுமந்து சென்று தாக்குதல் நடத்த முடியும். இவை வெவ்வேறு இலக்குகளை குறி வைத்து தாக்கும் திறன் கொண்டவை.

இந்த ஏவுகணையை ஏற்கனவே 7 முறை பரிசோதனை செய்துள்ளனர். இந்நிலையில் 8-வது முறையாக அடுத்த ஆண்டு (2018) மீண்டும் ஏவி பரிசோதிக்க உள்ளனர்.

 இந்த தகவலை சீன ராணுவ உயர் அதிகாரியான குயாங்யூ தெரிவித்துள்ளார். இந்த ஏவுகணை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை குறி வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதாக முன்பே ரஷிய நிபுணர்கள்தெ ரிவித்துதிருந்தார்கள்.

Trending News