ஸ்விம்மிங் பூல் பார்த்திருக்கிங்க..! கார் பூல் பார்த்திருக்கிறீர்களா..?

நீச்சல் குளத்தின் அருகில், காரை நிறுத்த சென்ற பெண் ஒருவர் சரியாக காரை நிறுத்தாதல், அந்த கார் நீச்சல் குளத்தில் விழுந்தது.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 6, 2018, 06:28 PM IST
ஸ்விம்மிங் பூல் பார்த்திருக்கிங்க..! கார் பூல் பார்த்திருக்கிறீர்களா..? title=

புளோரிடா நகரில் பார்கிங்கில் நிருத்தப்பட்டு இருந்த காரை, அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் பெண் எடுக்க சென்றார். அந்த காரில் அந்த பெண் மற்றும் அவரது கணவர், அவரது மகளும் இருந்தனர். அவர் காரை இயக்கம் போது, தான் பணம் எடுக்க மறந்துவிட்டதை அந்த பெண்ணுக்கு சட்டென்று ஞாபகம் வர, அவர் காரை விட்டு கீழே இறங்கி அபார்ட்மெண்ட் நோக்கி செல்கிறார். ஆனால் காரை சரியாக நிறுத்தாதல், அந்த கார் பின்னோக்கி சென்று அருகில் இருந்த நீச்சல் குளத்தில் விழுகிறது. நீச்சல் குளத்தில் விழுந்த காரில் அவரது கணவரும், மகளும் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக ஒருவருக்கும் காயம் ஏற்படவில்லை. இச்சம்பவம் வைரலாகி வருகிறது.

இச்சம்பவத்தை புளோரிடாவின் ஒகலோசா கவுண்டி ஷெரிஃபின் அதிகாரபூர்வமான தங்கள் முகநூலில் அதன் புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். தற்போது இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

காரை விட்டு வெளியே வரும் முன் பிரேக் சரியாக போட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

Trending News