பிரிட்டனின் புதிய பிரதமர் யார்: பிரிட்டன் அரசியலில் நெருக்கடி நிலை உருவாகியதை அடுத்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னெப்போதும் இல்லாத வகையில், 40-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில், போரிஸ் ஜான்சன் இந்த முடிவை அறிவித்தார். புதிய பிரதமர் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அது வரை அவர் பொறுப்புகளை கவனிப்பார் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போரிஸ் ஜான்சனின் ராஜினாமாவை தொடர்ந்து பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பணி தொடங்கியுள்ளது. விரைவில் புதிய பிரதமர் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மூவரது பெயர்கள் முன்னணியில் உள்ளன.
அறிக்கையின்படி, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், சுயெல்லா பிரவர்மேன் மற்றும் ப்ரீத்தி படேல் ஆகியோரது பெயர்கள் பிரதமர் போட்டியில் அடிபடுகின்றன. இவர்களின் அரசியல் பயணத்தைப் பற்றி இந்த பதவில் விரிவாகக் காணலாம்.
1. ரிஷி சுனக்
பிரிட்டனின் பிரதமராகும் போட்டியில் உள்ள இந்திய வம்சாவளியினரில் முன்னணியில் இருக்கும் பெயர் ரிஷி சுனக். ரிஷி சுனக் போரிஸ் அரசாங்கத்தில் நிதி அமைச்சராக இருந்தார். வியாழன் அன்று, போரிஸ் ராஜினாமா செய்த சிறிது நேரத்திலேயே, அவர் நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இவ்வாறான நிலையில் அவருக்கு இந்த பெரிய பொறுப்பு வழங்கப்படலாம் என ஊகங்கள் கிளம்பியுள்ளன. ரிஷி சுனக்கின் பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். ரிஷியின் தாத்தா பாட்டி பஞ்சாப் மாகாணத்தை (பிரிட்டிஷ் இந்தியா) சேர்ந்தவர்கள். இங்குதான் இருவரும் பிறந்தனர். அவர்கள் 1960 இல் பிரிட்டனுக்கு வந்தார்கள்.
மேலும் படிக்க | அடுத்த கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் மற்றும் இங்கிலாந்து பிரதமராக இவர் பதவி ஏற்கலாம்
இதற்குப் பிறகு சுனக்கின் தந்தை யாஷ்வீர் கென்யாவில் பிறந்து அங்கு படித்தார். சுனக்கின் தாய் உஷா தான்சானியாவில் பிறந்தார். கொரோனா காலத்தில், ரிஷி சுனக் நாட்டின் பொருளாதாரத்தை சிறப்பான முறையில் நடத்தி பாராட்டுதல்களை பெற்றார். இருப்பினும், மனைவி அக்ஷதா மூர்த்தியால் சில சர்ச்சைகளை அவர் சந்திக்க நேரிட்டது.
2. சுயெல்லா பிரேவர்மேன்
சுயெல்லா பிரேவர்மேன் தற்போது பிரிட்டிஷ் அமைச்சரவையில் அட்டர்னி ஜெனரல் பதவியில் உள்ளார். சுயெல்லா பிராவர்மேனும் தன்னை இந்தப் பதவிக்கான போட்டியாளராக விவரிக்கிறார். 2019 ஆம் ஆண்டுக்கான எனது தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற நான் இந்தப் பதவிக்கு வர வேண்டியது அவசியம் என்று அவர் கூறுகிறார்.
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற விரும்புகிறேன், ப்ரெக்சிட் தொடர்பான வாக்குறுதிகளை பூர்த்தி செய்ய விரும்புகிறேன் என்றார் அவர். வேலாவின் பெற்றோரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அவரது தந்தை கிறிஸ்டி கென்யாவிலிருந்து பிரிட்டனுக்கு வந்தார். தாய் உமா பெர்னாண்டஸ் மொரிஷியஸிலிருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார்.
3. ப்ரீத்தி படேல்
பிரிட்டன் பிரதமர் பதவிக்கான போட்டியில் இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்றாவது நபர் பிரிதி படேல் ஆவார். இவர் தற்போது பிரிட்டனின் உள்துறை செயலாளராக உள்ளார். போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் ஒருமுறை கோரியிருந்தார் என்பதிலிருந்தே அவரது அந்தஸ்தை அளவிட முடிகிறது.
ப்ரீத்தி படேல் 29 மார்ச் 1972 அன்று இங்கிலாந்தில் பிறந்தார். அவரது பெற்றோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், உகாண்டாவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தவர்கள். இவரது தந்தையின் பெயர் சுஷில் படேல், தாயின் பெயர் அஞ்சனா.
முன்னதாக, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் செயல்பாடுகளால் அமைச்சர்கள் பலருக்கு அதிருப்தி ஏறோட்டது. போரிஸ் ஜான்சன் பதவி விலகுவது நாட்டுக்கும், கட்சிக்கும் உகந்ததாக இருக்கும் என பலர் அவரிடம் நேரடியாக தெரிவித்தனர். இதை பற்றி முதன்முதலில் பேசிய அமைச்சர் மிக்கேல் கோவை போரிஸ் ஜான்சன் நீகினார். எனினும், இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இறுதியாக இப்போது பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR