மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 296 பேர் பலி

Morocco Earthquake Killed 296: மொராக்காவில் 6.8 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் இதுவரை 296 பேர் நிலநடுக்கத்தில் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை உயரக்கூடும்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 9, 2023, 08:20 AM IST
  • மொராக்காவில் 6.8 அளவிலான நிலநடுக்கம்
  • 296 பேர் நிலநடுக்கத்தில் பலி
  • பலி எண்ணிக்கை உயரக்கூடும்
மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 296 பேர் பலி title=

வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் மத்திய மொராக்கோவைத் தாக்கிய 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 296 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது. BNO செய்திகள் தெரிவித்துள்ள செய்திகளின்படி, இந்த நிலநடுக்கம் மிகப் பெரிய அளவில் இருந்தது.

6.8 அளவிலான நிலநடுக்கம் தாக்கியதால், அருகிலுள்ள மராகேஷில் கட்டிடங்கள் ஆடின. கட்டங்களில் அதிர்வுகள் ஏற்படுவதைக் கண்டு பீதியடைந்த மக்கள் தெருக்களுக்கு ஓடிவந்தனர். இருப்பினும், நில அதிர்வு ஏற்படுத்திய சேதத்தின் அளவை இன்னும் கண்டறிய முடியவில்லை.

நிலநடுக்கத்தின் மையம்,18.5 கிமீ ஆழத்தில் இருந்தது மற்றும் மார்ரகேஷிலிருந்து தென்மேற்கே 72 கிமீ தொலைவிலும், அட்லஸ் மலை நகரமான ஓகைமெடனுக்கு மேற்கே 56 கிமீ தொலைவிலும் உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்குப் பிறகு ஏற்பட்டது என்று யுஎஸ்ஜிஎஸ் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுவதால், மக்களிடையே கவலைகள் அதிகரித்துள்ளன.

மேலும் படிக்க | வேருடன் அழிக்கப்படுவார்கள்... காலிஸ்தானி தீவிரவாதம் குறித்து ரிஷி சுனக்!

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சில வீடியோக்களை, இன்னும் சரிபார்க்க முடியவில்லை என்று செய்தி வெளியிட்டுள்ள ராய்ட்டர்ஸ், குறைந்தபட்சம் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்து தெருக்களில் இடிந்து விழுவதைக் காட்டியது. ஷாப்பிங் சென்டர், உணவகங்கள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியே ஓடி வெளியே கூடுவதைக் காட்டும் வீடியோக்கள் சமூக ஊடகங்களி வைரலாகின்றன.

மராகேஷில் வசிக்கும் பிராஹிம் ஹிம்மி, பழைய நகரத்திலிருந்து ஆம்புலன்ஸ்கள் வருவதைக் கண்டதாகவும், பல கட்டிட முகப்புகள் சேதமடைந்ததாகவும் கூறினார். மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டால் பலர் அச்சமடைந்து வெளியில் தங்கியிருப்பதாக அவர் கூறினார்.

மேலும் படிக்க | ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது! ஜாமீனில் வெளிவரமுடியாது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News