ஜெனீவா: உலகெங்கிலும் கோவிட்-19 தொற்று மீண்டும் வேகமாக அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு புதிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மில்லியன் கணக்கானவர்களுக்கு இன்னும் தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளதால், அதை செய்து முடிப்பதன் அவசியத்தையும் உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கடந்த வாரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 சதவீதம் உயர்ந்துள்ளது. உலகளவில் 4.1 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக WHO அதன் சமீபத்திய எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
ஐ.நா. சுகாதார நிறுவனம், தொற்றுநோய் பற்றிய அதன் சமீபத்திய வாராந்திர அறிக்கையில், உலகளாவிய இறப்புகளின் அளவு முந்தைய வாரத்துடன் ஒப்பீட்டளவில் ஒரேபோல் இருந்ததாகவும், இதன் எண்ணிக்கை 8,500 ஆக இருந்ததாகவும் கூறியது.
கோவிட் தொடர்பான இறப்புகள் மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று பிராந்தியங்களில் அதிகரித்துள்ளன என உலக சுகாதார மையம் தெரிவித்தது. புதன்கிழமை பிற்பகுதியில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, புதிய கோவிட் -19 தொற்றின் மிகப்பெரிய வாராந்திர உயர்வு மத்திய கிழக்கு நாடுகளில் காணப்பட்டது. இங்கு தொற்றின் அளவு 47 சதவீதம் அதிகரித்துள்ளது
மேலும் படிக்க | கொரோனாவே இன்னும் முடியல, அடுத்து புது ஆபத்தா; அலறவைக்கும் அறிகுறிகள்
ஐரோப்பா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் தொற்றுகள் சுமார் 32 சதவீதமும், அமெரிக்காவில் சுமார் 14 சதவீதமும் அதிகரித்துள்ளதாக WHO தெரிவித்துள்ளது. WHO டைரக்டர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், 110 நாடுகளில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இந்த அதிகரிப்புக்கு பெரும்பாலும் ஓமிக்ரான் வகைகளான BA.4 மற்றும் BA.5 ஆகியவை காரணமாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
"இந்த தொற்றுநோய் மாறுகிறது, ஆனால் அது இன்னும் முடிவடையவில்லை" என்று டெட்ரோஸ் இந்த வாரம் ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார். கோவிட்-19- இன் மரபணு பரிணாமத்தை கண்காணிக்கும் திறன் "அச்சுறுத்தும் நிலையில்" இருப்பதாக அவர் கூறினார். நாடுகள் கண்காணிப்பு மற்றும் மரபணு வரிசைமுறை முயற்சிகளை தளர்த்தியுள்ளது இதற்கான காரணமாக இருக்கலாம் என கூறிய அவர், இதன் காரணமாக அதிகரிக்கும் புதிய மாறுபாடுகளை கண்டறிவது மிகவும் கடினமாக்கும் என்று எச்சரித்தார்.
சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட, மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நோய்த்தடுப்பு ஊசி போடுமாறு அவர் நாடுகளை கேட்டுக்கொண்டார். நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் இன்னும் தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளதாகவும் அவர்கள் கடுமையான நோய் மற்றும் இறப்பு அபாயத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
உலகளவில் 1.2 பில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளபோதும், ஏழை நாடுகளில் சராசரி நோய்த்தடுப்பு வீதம் சுமார் 13 சதவீதமாக உள்ளது என்று டெட்ரோஸ் கூறினார்.
ஆக்ஸ்பாம் மற்றும் மக்கள் தடுப்பூசி கூட்டணியால் தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, ஏழு பெரிய பொருளாதார நாடுகளின் குழுவால் ஏழை நாடுகளுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட 2.1 பில்லியன் தடுப்பூசிகளில் பாதிக்கும் குறைவானவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த மாத தொடக்கத்தில், குழந்தைகள் மற்றும் பாலர் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசிகளை அமெரிக்கா அங்கீகரித்தது. 18 மில்லியன் குழந்தைகளை இலக்காகக் கொண்டு தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
மேலும் படிக்க | Corona vs Unemployment: கொரோனாவினால் எதிர்காலம் இருண்டு போன சீன மாணவர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR