Amazon: அமேசான் CEO பதிவியிலிருந்து ஜெப் பிஸோஸ் விலகுகிறார்

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெப் பிஸோஸ் பதவியிலிருந்து விலக முடிவு  செய்ததாக முன்பு செய்திகள் வெளியாகிய நிலையில், இன்று, தனது பதவி விலகலை அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்கிறார். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 5, 2021, 10:35 AM IST
  • செயற்கை நுண்ணறிவு (Artificila Intelligence) சார்ந்த பொருள் தயாரிப்பிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
  • இதில் மிகவும் பிரபலமானது அமேசான் அலெக்ஸாவாகும்.
  • விண்வெளி ஆராய்ச்சி, கிளவுட் கம்ப்யூடிங் மற்றும் தொண்டு நடவடிக்கைகளிலும் அமேசான் நிறுவனம் ஈடுபட்டு கிறது.
Amazon: அமேசான் CEO பதிவியிலிருந்து ஜெப் பிஸோஸ் விலகுகிறார் title=

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் சர்வதேச அளவில் உலகளவில் பிரபலமான அமேசான் நிறுவனம்,  27 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில், ஜெப் பிஸோஸ்  என்பவர், தனது வீட்டின் கார் ஷெட்டில் வெறும் ஆன்லைன் புத்தக விற்பனை நிறுவனமாக உருவாக்கியதாகும். அமேசான் நிறுவனம்  தற்போது மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக உருவெடுத்துள்ளது. 

இந்நிலையில், தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெப் பிஸோஸ் (Jeff Bezos) பதவியிலிருந்து விலக முடிவு  செய்ததாக முன்பு செய்திகள் வெளியாகிய நிலையில், இன்று, அதாவது ஜூலை 5-ம் தேதி தனது பதவி விலகலை அதிகாரப்பூர்வமாக அவர் அறிவிக்கிறார். இதை அடுத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஆண்டி ஜாஸ்ஸி நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமேசான் நிறுவனம் முதலில், வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் புத்தகங்களை பதிப்பாளர்களிடமிருந்து வாங்கி, அவற்றை தபால்  மூலம் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனமாக  செயல் பட்டு வந்தது.

பின்னர் படிப்படியாக வளர்ந்த அமேசான் நிறுவனம் இன்று, மிக பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமாக, உலக அளவில் பரந்து விரிந்து, 1.7 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்பு கொண்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக  திகழ்கிறது.  ஆன்லைன் வர்த்தகம் (Online Shopping) மட்டுமல்லாது செயற்கை நுண்ணறிவு (Artificila Intelligence) சார்ந்த பொருள் தயாரிப்பிலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.  இதில் மிகவும் பிரபலமானது அமேசான் அலெக்ஸாவாகும். தவிர விண்வெளி ஆராய்ச்சி, கிளவுட் கம்ப்யூடிங் மற்றும் தொண்டு நடவடிக்கைகளிலும்  அமேசான் நிறுவனம் ஈடுபடு கிறது. 

உலகின் பெரும் பணக்காரராக  இருக்கும் ஜெஃப் பிஸோஸின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு 20,000 கோடி டாலர். அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற முன்னாள் மனைவி மெக்கன்ஸி ஸ்காட்டுக்கு தனது பாதி சொத்தை கொடுத்த பிறகும் இவரிடம் இந்த அளவுக்கு சொத்து உள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | கனடா, அமெரிக்காவில் வரலாறு காணாத வெப்பம்; நூற்றுக்கணக்கானோர் பலி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News