Russia: கோவிட் பாதிப்பு எண்ணிக்கையில் அச்சமூட்டும் அதிகரிப்பு, பீதியில் ரஷ்யா!!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துகொண்டிருப்பதால் உலக மக்கள் லேசான நிம்மதி அடையத் துவங்கியுள்ள வேளையில், பல நாடுகளில் தொற்றின் அளவுகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவில் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு தொற்று அதிகரித்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 28, 2021, 09:51 PM IST
  • ரஷ்யாவில் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு தொற்று அதிகரித்து வருகிறது.
  • இது நாட்டு மக்களுக்கும் நிர்வாகத்துக்கும் பீதியைக் கிளப்பி வருகிறது.
  • ரஷ்யாவில் இதுவரை 5.5 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Russia: கோவிட் பாதிப்பு எண்ணிக்கையில் அச்சமூட்டும் அதிகரிப்பு, பீதியில் ரஷ்யா!! title=

மாஸ்கோ: கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துகொண்டிருப்பதால் உலக மக்கள் லேசான நிம்மதி அடையத் துவங்கியுள்ள வேளையில், பல நாடுகளில் தொற்றின் அளவுகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவில் அதிர்ச்சியூட்டும் அளவுக்கு தொற்று அதிகரித்து வருகிறது.

ஜனவரி முதல் அதிகபட்சமாக, 21,650 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றால் பாதிக்கப்படுள்ளனர். ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு மத்தியில் ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தொற்றின் வேகத்தில் எழுச்சியைக் காண முடிகிறது. இது நாட்டு மக்களுக்கும் நிர்வாகத்துக்கும் பீதியைக் கிளப்பி வருகிறது. 

கடந்த ஆண்டு முதல் கொரோனா வைரஸின் மையமாக இருந்த ரஷ்ய (Russia) தலைநகரத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 7,200 க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 124 பேர் இறந்தனர். வெள்ளிக்கிழமை ஐரோப்பிய சாம்பியன்ஷிப் காலிறுதிப் போட்டி நடக்கவுள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் கடந்த 24 மணி நேரத்தில் 1,335 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 110 பேர் இறந்தனர். 

இந்த திடீர் எழுச்சியைத் தொடர்ந்து, அதிகாரிகள், எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முடிக்கி விட்டுள்ளனர். தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டும்தான் உணவகங்களில் அனுமதி அளிக்கப்படுகின்றது. 

ALSO READ: Kim Jong Un: மெலிந்த தோற்றத்தை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள்; காரணம் என்ன

மருத்துவமனைகளில் சேரும் மக்களின் எண்ணிக்கையும், தீவிர சிகிசைப் பிரிவில் சேரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துக்கொண்டு இருப்பதாக ரஷ்யாவிலிருந்து வரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மாஸ்கோ மேயர் செர்ஜி சோபியானின், நிலைமை "மிக மோசமாக" இருப்பதாக தெரிவித்தார். 

டெல்டா மாறுபாடு தலைநகரில் ஆதிக்கம் செலுத்துவதாக மாஸ்கோ மேயர் முன்பு கூறியிருந்தார்.

ஆறு யூரோ 2020 போட்டிகளை நடத்திய செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், காலிறுதிப் போட்டியை வெள்ளிக்கிழமை நடத்த உள்ளது. எனினும், தற்போது அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கைகள் சுகாதார அதிகாரிகளின் கவலையையும் அதிகரித்துள்ளது. 

146 மில்லியன் மக்கள்தொகையில் 21 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு ரஷ்யா தடுப்பூசி செலித்தியுள்ளதாக கூறப்படுகிறது, மாஸ்கோ அதிகாரிகள் சேவைத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்வதை கட்டாயமாக்கி உத்தரவிட்டுள்ளனர்.

எனினும், ரஷ்யாவில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலே ஸ்பூட்னிக் வி (Sputnik V) கோவிட் -19 தடுப்பூசியின் தயாரிப்பு துவங்கிவிட்ட போதிலும், அங்கு பல பிராந்தியங்கள் தடுப்பூசிகளின் பற்றாக்குறையை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவில் இதுவரை 5.5 மில்லியனுக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடிய வைரசுக்கு ஆளாகி, 133,893 பேர் இறந்தனர். ஞாயிற்றுக்கிழமை, தொற்றால் பாதிக்கப்பட்ட்ட 619 பேர் இறந்தனர். இது, கடந்த ஆண்டு டிசம்பருக்குப் பிறகு பதிவான அதிகபட்ச இறப்பு எண்ணிக்கையாகும்.

ALSO READ: UK: ‘முத்த’ சர்ச்சை... பதவி விலகிய பிரிட்டன் சுகாதார அமைச்சர்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News