Afghanistan Earthquake: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000ஐ எட்டியது.. சுமார் 2,000 வீடுகள் சேதம்

Afghanistan Earthquake Update: ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன, குறிப்பாக இந்து குஷ் மலைத்தொடரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதுண்டு.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 10, 2023, 11:47 AM IST
  • 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சுமார் 2,000 வீடுகள் சேதம்.
  • ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் இதுவரை 4,000 க்கும் அதிகமானோர் பலி.
  • அனைத்து நாடுகளையும் உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம் -ஆப்கானிஸ்தான்
Afghanistan Earthquake: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000ஐ எட்டியது.. சுமார் 2,000 வீடுகள் சேதம் title=

Afghanistan Earthquake News: சனிக்கிழமையன்று மேற்கு ஆப்கானிஸ்தானைத் தாக்கிய நிலநடுக்கத்தால் இதுவரை 4,000 க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் சுமார் 2,000 வீடுகள் முற்றாக இடிந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (ANDMA) தெரிவித்துள்ளது.

இதுவரை, நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பாக எங்களுக்கு கிடைத்த புள்ளி விவரங்கள் துரதிருஷ்டவசமாக 4,000 பேரைத் தாண்டிவிட்டன. எங்கள் தரவுகளின்படி, சுமார் 20 கிராமங்களில், தோராயமாக 1,980 முதல் 2,000 வீடுகள் முற்றிலும் இடிந்துவிட்டன" என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் செய்தித் தொடர்பாளர் முல்லா சாய்க் கூறியுள்ளார்.

பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 35 மீட்புக் குழுக்களில் மொத்தம் 1,000-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையும் பல நாடுகளும் ஆப்கானிஸ்தானுக்கு உதவிகளை செய்து வருகின்றன. ஈரானிய தொழில்நுட்பக் குழு பாதிக்கப்பட்ட பகுதிக்கு வந்துள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் உதவுமாறு அனைத்து நாடுகளையும் கேட்டுக் கொண்டுள்ளோம் என பேரிடர் மேலாண்மை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முல்லா ஜனன் சாய்க் தெரிவித்தார் 

மேலும் படிக்க - Israel Hamas Conflict: விடிய விடிய தாக்குதல்.. பெண்கள், குழந்தை என இதுவரை 1600 பேர் பலி

சனிக்கிழமை பிற்பகல் ஹெராட் மாகாணம் மற்றும் அண்டை பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது, உள்ளூர் நேரப்படி சுமார் 11.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. வடமேற்கு நகரமான ஹெராத் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு பேரழிவு தரும் நிலநடுக்கமாக இருந்தது.

நேற்று ஹெராத் மாகாணத்தில் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட ஆப்கானிஸ்தானின் தற்காலிக பிரதமர் முகமது ஹசன் அகுண்ட் தலைமையிலான அதிகாரிகள் குழு சென்றது.

மேலும் படிக்க - 5000 ராக்கெட்டுகள் தாக்குதல்.. 200 பேர் பலி; போரை அறிவித்த இஸ்ரேல் - அடுத்தது என்ன?

குளிர்காலம் நெருங்கி வருவதால், பாதிக்கப்பட்ட பகுதிகள் பயங்கர குளிர் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது மேலும் பல சிரமங்களை ஏற்படுத்தூம். மக்கள் தங்கள் வீடுகளை மட்டுமல்ல, முக்கிய உணவுப் பொருட்களையும் இழந்துள்ளனர். அவர்களுக்கு உடனடி உதவி மற்றும் பொருத்தமான தங்குமிடங்கள் அவசரமாகத் தேவைப்படுகின்றன என்று ஹெராட்டின் ஆளுநர் நூர் அஹ்மத் இஸ்லாஜர் தெரிவித்துள்ளார்.

சீனா தரப்பில் ஆப்கானிஸ்தான் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு 200,000 அமெரிக்க டாலர்களை அவசர மனிதாபிமான அடிப்படையில் மீட்பு மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள உதவி செய்தது.

ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன, குறிப்பாக இந்து குஷ் மலைத்தொடரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதுண்டு.

மேலும் படிக்க - நிலநடுக்கத்தால் 2,000-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News