காபூல்: ஆப்கானிஸ்தானின் புதிய ராணுவத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட தாலிபான் மூத்த தலைவர் காரி பாசிஹுதீன், நாட்டில் விரைவில் "வழக்கமான மற்றும் ஒழுக்கமான" இராணுவம் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறியுள்ளார்.
காபூலில் (Kabul) புதன்கிழமை (செப்டம்பர் 15, 2021) செய்தியாளர் சந்திப்பில் பேசிய காரி ஃபாசிஹுதீன், வரும் காலத்தில், நாட்டில் "வழக்கமான, ஒழுக்கமான மற்றும் வலுவான இராணுவத்தை" உருவாக்குவது குறித்து விவாதங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
ஊடக அறிக்கையின் படி, தாலிபான் தலைவர் ஆப்கானிஸ்தானின் (Afghanistan) எல்லைகளைப் பாதுகாக்க தங்கள் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார். கூடுதலாக, தாலிபான் செய்தித் தொடர்பாளர் அகமதுல்லா முத்தகியும் ஒரு ட்வீட்டில், ஆப்கானிஸ்தான் "விரைவில் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவத்தையும் படையையும் கொண்டிருக்கும்" என்று உறுதிப்படுத்தினார்.
ALSO READ: காணாமல் போன ஆப்கானிஸ்தான் சுப்ரீம் லீடர்; நீடிக்கும் மர்மம்..!!
“உள்நாட்டுப் போர் வரவிடமாட்டோம். பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பவர்கள் நசுக்கப்படுவார்கள், தாலிபானை எதிர்ப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் " என்று தாலிபான் (Taliban) இராணுவத் தலைவர் காரி பாசிஹுதீன் கூறினார்.
இதற்கிடையில், பரவி வரும் வதந்திகளை மறுத்த தாலிபானின் இணை நிறுவனர் மற்றும் செயல் துணைப் பிரதமர் முல்லா அப்துல் கானி பராதர் (Mullah Abdul Ghani Baradar) புதன்கிழமை (செப்டம்பர் 15) காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் நடந்த மோதலில் தான் காயமடைந்ததாக வந்த தகவல்களை மறுத்தார்.
ஆப்கான் தேசிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பராதர், காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் கடந்த வாரம் ஏற்பட்ட தகராறில் அவர் காயமடைந்ததாகவும், கொல்லப்பட்டதாகவும் பரவிய வதந்திகளை மறுத்தார் என்று சிஎன்என் தெரிவித்துள்ளது. தோஹாவில் உள்ள தலிபான்களின் அரசியல் அலுவலகம் ட்விட்டரில் இந்த பேட்டியை வெளியிட்டது.
ALSO READ: ஆப்கானில் கடும் நெருக்கடி; உடமைகளை விற்று சாப்பிடும் அவல நிலையில் மக்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR