கண்டெய்னரிலிருந்து கொத்து கொத்தாக எடுக்கப்பட்ட உடல்கள் - அமெரிக்காவில் பயங்கரம்

அமெரிக்காவில் ஒரு கண்டெய்னரிலிருந்து 46 உடல்கள் எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 28, 2022, 01:17 PM IST
  • 46 உடல்கள் கொத்து கொத்தாக எடுக்கப்பட்டன.
  • உயிரிழந்தவர்களும், சிகிச்சையில் இருப்பவர்களும் மெக்சிகோவிலிருந்து வந்தவர்கள்
கண்டெய்னரிலிருந்து கொத்து கொத்தாக எடுக்கப்பட்ட உடல்கள் - அமெரிக்காவில் பயங்கரம் title=

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சாண்டியாகோவின் புறநகர் பகுதியில் ரயில் தண்டவாளம் அருகே நேற்று சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நின்றுகொண்டிருந்தது. மாலை 6 மணியளவில் அப்பகுதிக்கு வந்த நகராட்சி ஊழியர்  ஒருவர் லாரி அருகே சென்று பார்த்தார்.

அப்போது கண்டெய்னருக்குள் இருந்து உதவி கேட்டு அழுகுரல் கேட்டுள்ளது. உடனடியாக, இது குறித்து அவர்  கவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆள் அரவமற்ற ஒதுக்குப்புறமான பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் கண்டெய்னரை திறந்து பார்த்தனர். 

மேலும் படிக்க | Fresh G7 Sanctions: ரஷ்யாவின் பாதுகாப்புத் துறைக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்கா

அப்போது, அந்த கண்டெய்னருக்குள் 50-க்கும் மேற்பட்டோர் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவத் துறையினர் கண்டெய்னரில் இருந்தவர்களை பரிசோதித்ததில் 46 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும், மேலும் மயக்கமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 4 குழந்தைகள் உள்ளிட்ட 16 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடந்துவருகிறது.

இந்த கண்டெய்னர் லாரி மெக்சிகோவில் இருந்து வந்ததும் லாரிக்குள் இருந்த அனைவரும் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் நோக்கத்தோடு வந்த அகதிகள் என்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடுமையான வெப்பம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களால் லாரி கண்டெய்னரில்  46 பேர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | பிரான்ஸ் நாட்டு காதலனை கரம்பிடித்த சேலத்து பெண் பொறியாளர்

மேலும், லாரியுடன் இணைக்கப்பட்ட கண்டெய்னர் குளிர்சாதன வசதிகொண்டது. ஆனால், அந்த குளிர்சாதன வசதி வேலை செய்யவில்லை என காவல் துறையினர் கூறியுள்ளனர் அதுமட்டுமின்றி கண்டெய்னருக்குள் போதிய உணவு, குடிநீர் இல்லாததாலும் கடுமையான வெப்பத்தாலும் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதற்கிடையே யாரும் இல்லாத இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடிய ஓட்டுநரை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இயங்கியுள்ளது காவல் துறை.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News