வங்கியின் தவறால் கோடீஸ்வரியாகி ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்த அதிர்ஷ்டகாரர்!

வங்கியின் தவறால் ஒரு பெண் கண்ணிமைக்கும் நேரத்தில் கோடீஸ்வரரானார். அதை அடுத்து அவர் விலையுயர்ந்த பிராண்டுகளின் ஆடைகள் மற்றும் நகைகளை வாங்கியதோடு,  விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பையும் வாங்கினாள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 14, 2022, 06:41 PM IST
  • சர்ச்சைகளுக்குப் பிறகு, லீ மலேசியாவுக்கு தப்பிச் சென்றார்.
  • லீ சுமார் 18 கோடி ரூபாய் செலவழித்திருந்தார்.
  • அன்லிமிடெட் ஓவர் டிராஃப்ட் என்ற சொற்றொடரை திரைப்படங்களில் அல்லது வேறு வகையில் பலமுறை கேட்டிருக்க கூடும்.
வங்கியின் தவறால் கோடீஸ்வரியாகி ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்த அதிர்ஷ்டகாரர்! title=

அன்லிமிடெட் ஓவர் டிராஃப்ட் என்ற சொற்றொடரை நீங்கள் திரைப்படங்களில் அல்லது வேறு வகையில் பலமுறை கேட்டிருக்க கூடும். ஆனால், மலேசியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நிஜமாகவே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அவரது கணக்கில் திடீரென கோடிக்கணக்கான ரூபாய் வர வைக்கப்பட்டு சில நொடிகளில் கோடீஸ்வரரானார். அதன்பிறகு அந்த பெண் சுமார் ஒரு வருடத்திற்கு கண் மூடித்தனமாக பணம் செலவழித்துள்ளார்.

இந்த ஆச்சரியமான தற்செயல் நிகழ்வினால் கிறிஸ்டின் ஜியாக்சின் லீ என்ற பெண் கன் இமைக்கும் நேரத்தில் பணக்காரர் ஆனார். மலேசியாவைச் சேர்ந்த லீ, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கச் சென்றிருந்தபோது, ​​வங்கி செய்த ஒரு தவறு அவரது வாழ்க்கையை மாற்றியது. Westpac வங்கி கிறிஸ்டின் கணக்கிற்கு வரம்பற்ற ஓவர் டிராஃப்ட் வசதியை தவறுதலாக வழங்கியது.

மேலும் படிக்க | Viral News: 8 மனைவிகளுக்கும் ஒரு அரண்மனை; டைம் டேபிள் போட்டு காதல் செய்யும் நபர்!

இதை அடுத்து லீன் ஆடம்பர வாழ்க்கையை வாழத் தொடங்கினார். லீ வங்கிக்கு, இதுபற்றி எந்தத் தகவலையும் தெரிவிக்காமல், கணக்கில்லாமல் ஷாப்பிங் செய்யத் தொடங்கினார். அவள் ஆடம்பர வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாள். அவள் விலையுயர்ந்த பிராண்டுகளின் ஆடைகள் மற்றும் நகைகளை வாங்கினாள். பார்ட்டிகள் மற்றும் பயணங்களுக்கு நிறைய பணம் செலவழித்தோடு, விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பை வாங்கினாள். மேலும், 2.50 லட்சம் ரூபாயை வேறு கணக்கில் மாற்றியுள்ளார்.

கிறிஸ்டின் சுமார் 11 மாதங்களுக்கு நிறைய பணம் செலவழித்ததாகவும், அது குறித்து வங்கிக்கு தெரிவிக்கவில்லை என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அந்தத் தவறை வங்கி உணர்ந்து கொள்ளும் நேரத்தில், லீ சுமார் 18 கோடி ரூபாய் செலவழித்திருந்தார்.இதை அடுத்து லீ கைது செய்யப்பட்டார், ஆனால் அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.

லீ தனது பெற்றோர், பணத்தை கணக்கிற்கு மாற்றியதாக நினைத்தேன் எனக் கூறினார். லீ நேர்மையற்ற செயல்களைச் செய்திருந்தாலும், வங்கியின் தவறு காரணமாக அவர் மோசடி செய்ததாகக் கருத முடியாது என்று அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார். மறுபுறம் அவரது காதலன், லீயின் பணம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார். சர்ச்சைகளுக்குப் பிறகு, லீ மலேசியாவுக்கு தப்பிச் சென்றார். அதிகாரிகள் சுமார் 10 கோடி தொகையை மீட்டனர். ஆனால், மீதமுள்ள பணத்தை அவர்களால் பெற முடியவில்லை.

மேலும் படிக்க | Viral News: கேட்ட பார்த்தாலே பயமா இருக்கே... இது உலகின் கொலைகார தோட்டம்

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News