வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனையால் 200 பேர் உயிரிழப்பு

Last Updated : Oct 31, 2017, 05:50 PM IST
வடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனையால் 200 பேர் உயிரிழப்பு  title=

வடகொரியாவில் வெடிகுண்டை பரிசோதனை செய்த பிறகு சுரங்கம் இடிந்து விழந்ததில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என ஜப்பானின் செய்தி சேனல் தகவல் வெளியிட்டு உள்ளது.

வடகொரியா கடந்த மாதம் ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதனை செய்த பின்னர் பியாங்யாங்கி அணு ஆயுத சோதனை மையத்தில் சுரங்கம் இடிந்து விபத்து நேரிட்டது, இதில் 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என ஜப்பானின் அஷாகி டிவி செய்தி வெளியிட்டு உள்ளது.

வடகொரியாவில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின்படி அணு ஆயுத பரிசோதனை மையத்தில் கட்டப்பட்டு வந்த சுரங்கம் இடிந்து உள்ளது என ஜப்பான் மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது. 

ஜப்பான் செய்தி சேனல் வெளியிட்டதாவது:-

கடந்த மாதம் ஹைட்ரஜன் வெடிகுண்டை பரிசோதனை செய்த பின்னர் பியாங்யாங்கி அணு ஆயுத சோதனை மையத்தில் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டது. அப்பொழுது அங்கு வேலை பார்த்து வந்த 100-க்கு அதிகமானோர் பலியாகினர். கடைசியாக கிடைத்த தகவல் படி இந்த விபத்தால் 200-க்கும் அதிமானோர் பலியாகி உள்ளனர் என செய்தி சேனல் கூறியுள்ளது. இந்த விபத்து ஏற்படக் காரணம் வடகொரியா தொடர்ச்சியாக அணு ஆயுதம் சோதனைகள் மேற்கொள்வதால், பரிசோதனை கூடம் பலவீனமாகி விபத்து ஏற்பட்டுள்ளது எனவும் ஜப்பான் செய்தி சேனல் கூறியுள்ளது.

Trending News