தாயின் உயிரை காப்பாற்றிய 10 வயது சிறுவன்

Last Updated : Aug 22, 2017, 06:15 PM IST
தாயின் உயிரை காப்பாற்றிய 10 வயது சிறுவன் title=

தனது தாய் மற்றும் பிறந்து சிறிது நேரம் மட்டுமே ஆனா கைகுழந்தையையும் காப்பாற்றி 10 வயது சிறுவன் மக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளன்.

ஜெய்டன் ஃபோட்டினோட்-ன் தாயார் அஷ்லி மோர்ரோ கர்பவதியாக இருந்த நிலையில் அவரது பிரசவதேதிக்கு ஆறு வாரங்களுக்கு முன்னர், அவருக்கு, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் பிரசவவலி வந்துள்ளது.

அன்று 10 வயது சிறுவனான ஜெய்டன் ஃபோட்டினோட் மட்டுமே வீட்டில் இருந்துள்ளான். தனக்கு ஏற்பட்டுள்ளது பிரசவவலி தான் என அறிந்த அஷ்லி மோர்ரோ தன மாகனை அழைத்து, பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் பாட்டியிடம் விஷத்தை தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.

தனது பாட்டியிடம் என்ன செய்யவேண்டும் என கேட்டறிந்த ஜெய்டன் தன் தாய்க்கு தேவையான முதலுதவிகளை செய்துள்ளான். பின்னர் தன தாய் கூறிய அறிவுரைகில் பேரில் தனது சகோதரனுக்கு பிரசவத்தில் உயிர் கொடுத்துள்ளார்.

டெக்கான் குரோனிக்கல் கூற்றுப்படி, அவசர மருத்துவ குழு ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வந்தபோது, குழந்தை ஏற்கனவே பிறந்து சுவாசிக்கத் தொடங்கிவிட்டது என தெரிவித்துள்ளது.

மேலும் குழந்தை இப்போது ஆரோக்கியமாக இருக்கிறது, ஜெய்டன் இல்லையேனில், குழந்தை உயிரோடு இருந்திருக்க வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Trending News