புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் கொரியாவில் கர்ப்பிணி ஒருவர் ஆட்டோ ரிக்ஷாவில் பிரசவித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகர் ராய்பூரில் இருந்து சுமார் 350 கிமி தொலைவில் உள்ள கிராமம் கொரியா. இங்கு மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் பெரும் பற்றாகுறை நிலவி வருகிறது.
இந்நிலையில் இன்று கொரியா சமூக சுகாதார மையத்திற்கு அப்பகுதியில் வசிக்கும் பெண்மனி ஒருவர் பிரசவத்திற்காக வந்துள்ளார். ஆனால் அந்த சமூக சுகாதார மையத்தில் மருத்துவர்கள் இல்லாததால் அப்பெண்மனி வெறுவழியில்லாமல் நகர தலைமை மருத்துவமனைக்கு கொண்டுச்செல்ல பணிக்கப் பட்டுள்ளார்.
செல்லும் வழிலேயே அவருக்கு பிரசவ வலி அதிகரிக்க, அப்பகுதியில் கூடியிருந்த பெண்களின் உதவியுடன் அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. இந்த பிரசவத்தில் அவர் அழகிய குழந்தையினையும் பெற்றெடுத்தார்.
மருத்தும் படித்த மாணவர்கள் பலர் இருந்தாலும் மருத்துவத்தினை சேவையாக நினைக்கும் மாணவர்கள் இல்லை. ஒருவேலை இருந்திருந்தால் கிராமங்கள் எங்கும் மருத்துவர்கள் குவிந்திருப்பர் என பிரசவத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்!