பொய் செய்தி பரப்பும் பத்திரிக்கையாளர் மீது நடவடிக்கை இல்லை -மோடி!

பொய்யான செய்தி பரப்பும் பத்திரிகையாளர் மீது நடவடிக்கை இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்...!

Last Updated : Apr 3, 2018, 02:13 PM IST
பொய் செய்தி பரப்பும் பத்திரிக்கையாளர் மீது நடவடிக்கை இல்லை -மோடி! title=

மத்திய அரசு பொய்யான செய்தி பரப்பும் பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், பாரத பிரதமர் மோடி அந்த திட்டத்தை மாற்றி அமைத்து பொய் செய்தி பரப்புபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடாது என தெரிவித்துள்ளார். 

சமூக வலைத்தளங்களில் போலியான செய்தி அதிகமாக பரவுதல், பத்திரிக்கைகளில் தவறான செய்திகளை பரப்புதல், கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்கா விவகாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய அரசு தரப்பில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி இன்று ஒரு தகவலை வெளியிட்டிருந்தார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பத்திரிக்கைகளில் பொய் செய்தி பரப்பினால் அந்த பத்திரிக்கையின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். பத்திரிக்கையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இந்திய பத்திரிக்கையாளர் சங்கம் மற்றும் தேசிய தொலைக்காட்சி கூட்டமைப்பு ஆகியவை முடிவு செய்யும். விரைவில் இதற்கான விதிமுறைகள் வகுக்கப்படும்" என அவர்  தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து இந்த விவகாரத்தில் சில எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து மத்திய அரசின் சார்பில் அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி கூறியது நடைமுறைக்கு கொண்டு வரப்படாது என பிரதமர் அறிவித்துள்ளார். மத்திய அரசு திட்டம் போட்ட 24-மணி நேரத்திலேயே போட்ட திட்டத்தை மாற்றி அமைத்தது. மேலும் இது சம்மந்தமாக பத்திரிக்கையாளர் சங்கம் முடிவெடுத்துக் கொள்ளட்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

Trending News