மூவர்ண கொடி போர்த்தும் அளவுக்கு நடிகை ஸ்ரீதேவி நாட்டுக்கு என்ன செய்து விட்டார் என மகாராஷ்டிரா அரசியல் பிரபலம் ராஜ் தாக்கரே கேள்வி எழுபியுள்ளார்.
தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீ தேவி (54) கடந்த பிப்ரவரி 24-ம் தேதி இரவு 11 மணியளவில் துபாயில் தங்கியிருந்த நட்சத்திர ஓட்டலில் மரணமடைந்தார்.
முதலில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது பின்னர், உடற்கூறு ஆய்வில் அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருந்ததாகவும், அதனால் மயங்கி தவறுதலாக குளியல் தொட்டியில் மூழ்கி இறந்ததாக என கூறப்பட்டது. அனைத்து விசாரணைக்கு பிறகு கடந்த பிப்ரவரி 27-ம் தேதி இரவு நடிகை ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டுவரப்பட்டது.
அம்பானியின் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட்ட ஸ்ரீ தேவியின் உடல் முதலில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. பின்பு மும்பை செலிபிரேசன் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பாலிவுட் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமா மற்றும் இந்திய சினிமாவில் பல திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.
இறுதியாக அவருக்கு அரசு மரியாதையும் கொடுக்கப்பட்டது. அதாவது அவரது உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டது.
திரையுலகினர் மட்டுமல்லாது, அரசியல் பிரமுகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் ஆகியோரும் ஸ்ரீதேவிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். நண்பகல் 2 மணிக்கு மேல் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு மாலை 3.30 மணியளவில் மும்பை, வில்லேபார்லே மயானத்தில் அரசு மரியாதையுடன் ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம் சினிமா துறையில் உள்ளவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. பின்னர் ஸ்ரீதேவியின் உடலுக்கு தேசிய கொடி போர்த்தப்பட்டதை குறித்து அப்போதே பல சர்ச்சைகள் வந்தன.
இந்நிலையில் மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய ராஜ் தாக்ரே பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கின் போது மாநில அரசின் சார்பில் அவரது உடலுக்கு தேசியக் கொடி போர்த்தப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
ஸ்ரீதேவி மிகச் சிறந்த நடிகை, ஆனால் அவர் நாட்டிற்காக என்ன செய்துவிட்டார் என்று அவர் மீது தேசிய கொடியை அணிவித்தார்கள். அவர் பத்மஸ்ரீ வாங்கினார் அதனால் அப்படி செய்தோம் என்பதெல்லாம் முட்டாள் தனமானது. மகாராஷ்டிர அரசு தவறு செய்துவிட்டது என்று பரபரப்பாக பேசியுள்ளார்.