ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

ஒருநாள் பயணமாக இன்று ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்!

Last Updated : May 21, 2018, 05:15 PM IST
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி சந்திப்பு!  title=

ரஷ்யாவும் இந்தியாவும் நீண்டநாட்களாக நல்ல நட்புறவை கடைபிடித்து வருகிறது. இந்நிலையில், ரஷ்ய நாட்டு அதிபர் புதின் விடுத்த அழைப்பினை ஏற்று, ஒருநாள் பயணமாக இன்று ரஷ்யா சென்றார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. 

இந்த பயணத்தின் போது, இரு தரப்பு உறவுகளை பலப்படுத்துவது குறித்தும், சர்வதேச பிரச்சனைகள் குறித்தும், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 

ஈரானுடனான அமெரிக்காவின் மோதல் போக்கால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, மேலும் ஈரானில் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த சபார் துறைமுகம் அமைப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் புதினும் மோடியும் நடத்திய பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்து, பிரதமர் மோடி, நட்பு ரீதியிலான சந்திப்புக்கு விளாடிமர் புதின் என்னை அழைத்ததற்காக நன்றி  என்று கருத்து தெரிவித்துள்ளார்.

India and Russia have been friends for a long time. Thankful to President Putin for inviting me for an informal meeting at Sochi: PM Narendra Modi in #Russia's Sochi pic.twitter.com/WxIZaUDniR

Trending News