224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த வாரம் தேர்தல் நடைபெற உள்ளதால், அனல் பறக்கும் பிரசாரத்தால், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
கார்நாடக மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் வரும் மே 12-ஆம் நாள் நடைப்பெறவுள்ள நிலையில், பிரதமர் மோடியும், காங். தலைவர் ராகுலும் ஏற்கனவே தங்கள் பிரசாரத்தை துவக்கி விட்டனர். இருவரும் அனல் பறக்கும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், கர்நாடகவுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக-வின் முதல்வர் வேட்பாளரும், கட்சியின் மாநில தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளார்.
அதை தொடர்ந்து, கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பங்காரப்பேட்டையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி பேசியதாவது!
ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவி வருகிறது. இதனை உத்தரகண்டிலும், உத்தர பிரதேசத்திலும் பார்த்துள்ளோம் கர்நாடகாவை விட்டு வெளியேறும் நேரமும் அக்கட்சிக்கு வந்துவிட்டது. மாநிலத்தில் காங்கிரசை வழியனுப்ப மக்கள் தயாராக உள்ளனர் அக்கட்சியின் உண்மை முகத்தை மக்கள் தெரிந்து கொண்டுள்ளர் இதனால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
அடுத்த 5 ஆண்டுகளில் மாநிலத்திற்கு என்ன தேவை என்பதை நிர்ணயிக்கும் தேர்தல் இது. பல மாநிலங்களை காங்கிரஸ் சீரழித்து வந்தது, கலாசாரம், வகுப்புவாதம், சாதி, குற்றம், ஊழல், ஒப்பந்ததாரர் முறை ஆகிய 6 நோய்களால் காங்கிரஸ் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
#WATCH live from Karnataka: PM Narendra Modi addresses a public meeting in Kolar's Bangarapet https://t.co/zXbNJl3WMM
— ANI (@ANI) May 9, 2018
அக்கட்சியின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. மன்மோகன் பிரதமராக இருந்தாலும், ரிமோட் சோனியாவிடம் இருந்தது. ஆனால், எனது ரிமோட் மக்களிடம் உள்ளது. பெண்கள் பாதுகாப்பில் காங்கிரசுக்கு அக்கறையில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஊழல் நிறைந்துள்ளது. பா.ஜ., ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏசி அறையில் அமர்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியால், உங்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியாது.