விஜய் வழியில் கதையை தேர்வு செய்யும் இளம் நடிகர்கள்! யார் தெரியுமா?

விஜய்யின் 62-வது படமானது விவசாய பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது என்ற கருத்து சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

Last Updated : Apr 7, 2018, 07:23 PM IST
விஜய் வழியில் கதையை தேர்வு செய்யும் இளம் நடிகர்கள்! யார் தெரியுமா?  title=

விஜய்யின் 62-வது படமானது விவசாய பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது என்ற கருத்து சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளாம் உள்ளது. தற்போது நடிகர் விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் நடித்து வருகிறார். 

மூன்றாவது முறையாக ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இது விஜய்-ன் 62_வது படமாகும்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கடந்த சனவரி 19-ம் தேதி பூஜையோடு இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கியது. விஜய் அவர்கள் கிளப் செய்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். விஜய் 62 படம் இந்த வருட தீபாவளிக்கு வெளிவரும் என ஏ.அர்.முருகதாஸ் தெரிவித்திருக்கிறார். 

விஜய்யின் இந்த 62- வது படமானது விவசாய பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது என்ற கருத்து சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன், உதயநிதிஸ்டாலின், விஷால், கார்த்தி ஆகிய இளம் நடிகர்களும் தங்களது நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் தமிழ்நாடு தற்போது சந்திக்கும் விவசாய பிரச்சனைகளை பற்றி பேசுகிறார்களாம். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தரும் என்று அவர்கள் எதிர்பார்கின்றனர். 

முன்னதாக, விஜய் நடிப்பில் ஏ.அர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி 2014 ஆம் ஆண்டு தீபாவளியன்று வெளியான கத்தி திரைப்படம் விவசாய பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டத்தால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

Trending News