பிரபல தகவல் பரிமாற்றச் செயலியான வாட்ஸ் ஆப், தனது பயனாளர்களுக்கு புதிய அம்சங்களுடன் கூடிய அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. தற்போது, பயனாளர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் வகையில், வாட்ஸ்ஆப் நிறுவனம் 3 புதிய அப்டேட்களை கொண்டு வந்துள்ளது.
ஒரு முறை மட்டும் பார்க்கக்கூடிய மெசேஜ்களை இனி ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாது. முன்னதாக, ’view once’ என அனுப்பப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நம்மால் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க இயலும்.