தமிழகத்தில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
"10 மற்றும் 12-ஆம்" வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளார் என விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து தெரிவித்துள்ளார்.