Video: ரசிகர்களுக்காக உயிரையே பணயம் வைத்த M.S.தோனி!

ரசிகர்களுக்காக உயிரை பணயம் வைத்து செல்பி எடுக்கும் தோனியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

Last Updated : Mar 20, 2018, 08:25 AM IST
Video: ரசிகர்களுக்காக உயிரையே பணயம் வைத்த M.S.தோனி! title=

ரசிகர்களுக்காக உயிரை பணயம் வைத்து செல்பி எடுக்கும் தோனியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது!

இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகர்களின் பட்டாளம் அதிகம். இதில் அதிகமான ரசிகர்கள் தோனியுடன் ஒரு செல்ஃபி எடுப்பதை பலர் தங்களது வாழ்நாள் கனவாகவும் சாதனையாகவும் வைத்துள்ளனர். 

இந்நிலையில் சமீபத்தில் தோனி மும்பையில் உள்ள ஒரு மாலுக்கு சென்றுள்ளார். தோனி அங்கு வந்திருக்கும் தகவல் வெளியானதும் ஆயிரக் கணக்கான ரசிகர்கள் அந்த மால் முன்பு கூடினர். அங்கு திரண்ட ரசிகர்களில் பலரும், அவருடன் ஒரு புகைப்படமாவது எடுத்துவிட வேண்டும் என்று வெளியே காத்துக்கொண்டிருந்தனர்.

அவ்வளவு பேருடன் புகைப்படம் எடுப்பது சாத்தியமில்லை என்பதால் தோனி கடையின், பில்லர் மீது ஏறிய கண்ணாடி வழியாக ரசிகர்களைப் பார்த்தபடி செல்ஃபி எடுத்துக் கொண்டார். 

மிகவும் ஆபத்தான சுவர் ஒன்றின் மீது ஏறிய தோனி செல்ஃபி எடுத்த வீடியோ இணையதளத்தில் வைரலாக வருகிறது. பலரும் தோனியைப் பாராட்ட சில ரசிகர்களோ இனி இப்படிப்பட்ட ஆபத்தான காரியங்களில் ஈடுபட வேண்டாம் என்று செல்லமாக கோவித்துக்கொண்டனர்.

இதோ அந்த வீடியோ காட்சி உங்களுக்காக...! 

 

Video Courtesy: RP Channel...! 

Trending News