இணையத்தை கலக்கும் நிறைமாத கர்ப்பிணி ஆடிய போல் டான்ஸ் -Video!

வீடியோ: இணையத்தில் வைரலாகிறது 9-மாத கர்ப்பிணி பெண்ணின் துருவ-நடனம் அதாவது போல் டான்ஸ் வீடியோ!

Last Updated : Mar 30, 2018, 10:15 AM IST
இணையத்தை கலக்கும் நிறைமாத கர்ப்பிணி ஆடிய போல் டான்ஸ் -Video! title=

நிறைமாத கர்ப்பிணி பெண் மிகவும் நளினமாக போல் டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றுதற்போது சமூக வலைதளங்களில் பயங்கரமாக பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஆலிசான் ஸ்பஸ் தற்போது 9 மாத கர்ப்பிணி ஆவார். ஆர்லாண்டோவில், ஆலிசான் உடற்பயிற்சி மற்றும் நடனம் பயிற்று விப்பாளராகப் இவர் பணிபுரிகிறார். இவர் ஒரு தொழில்முறை நடனக் கலைஞரும் கூட. இவர் போல் டான்சிங் ஆடுவதில் தனி ஈர்ப்பு கொண்டவர். 

தாம் கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் அசாத்தியமான மாறுதல்களையும் அப்போது ஏற்படும் உடல் சார்ந்த பிரச்சினைகளையும் தாண்டி அவர் தொடர்ந்து நடனமாடுவதை நிறுத்தவில்லை. சமீபத்தில், ஆலிசான் இன்ஸ்டாகிராமில் அவரின் நடன வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். 

அந்த வீடியோவில் உள்ளது சாதாரண நடன அசைவுகள் கொண்ட காட்சிகலே அதில் இல்லை. ரொம்பவே கடினமான போல் டான்ஸிங்கை (pole dance) தான் அவர் அவ்வளவு அசாத்தியமாகவும் நளினமாகவும் ஆடுகிறார். 

இதோ அந்த வீடியோ உங்களுக்காக.....! 

 

Video Courtesy : Allison Sipes instagram!!

Trending News