வட கொரியாவில் அணுஆயுத சோதனை நிறுத்தம்: டிரம்ப் மகிழ்ச்சி!!

ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு, அணுஆயுத சோதனை தளத்தையும் உடனடியாக மூடப் போவதாக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார்.

Last Updated : Apr 21, 2018, 07:59 AM IST
வட கொரியாவில் அணுஆயுத சோதனை நிறுத்தம்: டிரம்ப் மகிழ்ச்சி!! title=

வட கொரியாவின் போக்கு உலகப் போருக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் கவலை கொண்ட நிலையில், அணு ஆயுத சோதனையை நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது.

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணை சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வந்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் நிலவி வந்தது. இதனை தொடர்ந்து வட கொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.

இந்நிலையில் வட கொரியா, தென் கொரியா இடையே பதற்றம் குறைந்து அமைதியான சூழல் தற்போது உண்டாகியுள்ளது. மேலும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும், வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னும் முதன்முறையாக வரும் மே மாதம் சந்தித்து பேச திட்டமிடப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அணு ஆயுத சோதனை, பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் தொலை தூரம் தாக்கும் ஏவுகணை சோதனையை நிறுத்துவதாக வட கொரியா அறிவித்துள்ளது. 

கொரிய தீபகற்பத்தில் பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைதியை இலக்காக வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் கூறியுள்ளது.

ஏப்.,21 முதல் அணுஆயுத சோதனை முற்றிலும் நிறுத்தப்படும் என அறிவித்துள்ள அதிபர் கிம் ஜோங் உன், அணு ஆயுத சோதனை தளத்தை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டரில்கருத்து தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப்.....!!

"வட கொரியாவிற்கும், ஒட்டு மொத்த உலகிற்கும் இது நற்செய்தி - பெரும் முன்னேற்றம்" என்றார்.

முன்னதாக, அணு ஆயுத பயன்பாட்டை நிறுத்தினால், வட கொரியாவிற்கு ஒளிமையமான எதிர்காலம் இருக்கும் என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், வட கொரியாவின் இந்த அறிவிப்பானது "அர்த்தமுள்ள ஒரு முன்னேற்றம்" என்று தென் கொரிய அதிபரின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Trending News