இரண்டுமுறை சாம்பியன் பட்டம் வென்ற விக்டோரியா அசரென்கா இந்த மாத நடக்கவிருக்கும் ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டியில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரபேல் நடாலும் மற்றும் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸின் கரோலின் கார்ஸியாவும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினர்.
சீன ஓபன் டென்னிஸ் போட்டி சீன தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியின் ஆண் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நடால் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோûஸ தோற்கடித்தார்.
சீன ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் இவர் இந்தாண்டில் மொத்தமாக 6-வது பட்டத்தைக் கைப்பற்றி இருக்கிறார்.
உலக பேட்மிட்டன் சாம்பியன் தொடரின் இன்று நடைபெற்ற போட்டியில் சாய்னா வெற்றிபெற்றார்.
லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா இன்று சுவிட்சர்லாந்தின் சப்ரினா ஜாகுட்டிற்கு எதிராக போட்டியிட்டர். இந்த போட்டி இந்திய ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
World Badminton Championship: Saina Nehwal defeats Sabrina Jaquet of Switzerland 21-11, 21-12, advances to pre-quarter final.
— ANI (@ANI) August 23, 2017
விளையாட்டு வினையாகும் என்பது பழமொழி, அந்த பழமொழிக்கு ஏற்ப தலைகீழாக பல்டியடிக்க முயன்று, பாடி பில்டிங் சாம்பியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பாடி பில்டர் சாம்பியன், சிஃபிஸ்கோ லுங்கேலோ. 75 கிலோ எடை பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர். டர்பனின் நடந்த பாடி பில்டிங் போட்டியில் பங்கேற்றபொது இவர் பின்பக்கமாக பல்டியடிக்க முயன்றார்.
6 நாடுகள் பங்கேற்ற ஆசிய கோப்பை மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய பெண்கள் சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.
இதுவரை நடந்துள்ள 6 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அனைத்திலும் இந்தியாவே பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு கிரிக்கெட் வாரியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார். இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சன்-யூ -வை வீழ்த்தி சிந்து சாம்பியன்
பட்டத்தை வென்றார். 21- 11, 17 - 21, 21 - 11 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து , சன் யூ-வை வீழ்த்தினார். ஒரே ஆண்டில் 3 பேட்மிண்டன் தொடர்களில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சிந்து சாதனை படைத்துள்ளார்.
அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி சிந்து, தென் கொரியாவின் சங் ஜி யுங் மோதினர். அவரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று ன வீராங்கனை சன்-யூ -வை வீழ்த்தி சிந்து சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.