மெல்போர்ன் நகரில் நடைப்பெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார். இது இவரது 20வது கிராண்ட்ஸ்லாம் ஆகும்.
மெல்போர்ன் நகரில் நடைப்பெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் பிரிவில் இன்று நடந்த சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் ரோஜர் பெடரர் மற்றும் மரின் சிலிக் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
நேற்று நடைப்பெற்ற அரையிறுதி போட்டியில் தென் கொரிய வீரர் ஹெயின் சங் மற்றும் பெடரர் போட்டியிட்டனர். இப்போட்டியின் முதல் செட்-ன் 1-6 என்ற கணக்கில் இழந்ந சங், இரண்டாவது சுற்றின் போது அவரது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார்.
இதனால் பெடரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இறுதி போட்டி நடைப்பெற்றது இதில் ரோஜர் பெடரர் 6-2 6-7(5) 6-3 3-6 6-1 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றார்.
BACK TO BACK @rogerfederer captures his 20th Grand Slam title defeating Marin #Cilic 6-2 6-7(5) 6-3 3-6 6-1.#AusOpen #RF20 pic.twitter.com/ljJKFnnr8g
— #AusOpen (@AustralianOpen) January 28, 2018
36 வயதாகும் ரோஜர் பெடரர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 30-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார், மேலும் இன்றைய போட்டியில் இவர் வென்றது அவரது 20 கிராண்ட்ஸ்லாம் என்பது குறிப்பிடத்தக்கது!