வீர சிவாஜி சினிமாவில் சொப்பன சுந்தரி நான்தானே என்ற பாடலைப் பாடிய வைக்கம் விஜயலட்சுமி 67 பாடல்களை இடைவிடாது இசைத்து உலக சாதனை படைத்துள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் விஜயலட்சுமி பிறவியிலேயே பார்வையற்றவர். இவர் தமிழ், மலையாளம் சினிமாக்களில் பல பாடல்களை பாடியுள்ளார்.
பார்வை திறனற்ற மாற்று திறனாளியானக இருந்தாலும் இறைவனால் அளிக்கப்பட்ட அதீத திறமையால் பாடகி வைக்கம் விஜயலட்சுமி பல சாதனைகள் படைத்து வருகின்றார்.
இந்த வகையில் நேற்று கொச்சியில் நடந்த இசை நிகழ்ச்சியில், வீணையில் பாடலை இசைத்த வைக்கம் விஜயலட்சுமி, 67 பாடல்களை இடைவிடாது தொடர்ந்து 5 மணி நேரம் இசைத்தார்.
ஒடிசா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை காலிறுதியில் அசத்திய குஜராத் வீரர் சமித், 359 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், முதல் தர கிரிக்கெட்டில் துவக்க வீரராக களமிறங்கி அதிக ரன்கள் குவித்து, கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தவர் என்ற உலக சாதனை படைத்தார்.
பா.ரஞ்சித் இயக்கியத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் 'கபாலி'யின் டீஸர் வெளியிடப்பட்டது. டீஸர் மே 1ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்படதால் அனைவரும் டீஸர்காக காத்துகொண்டு இருந்தார்கள். காலை 11மணி அளவில் டீஸர் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில நிமிடங்களிலே உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கானோர் பார்த்ததால் சமுக வலைதளமே ஒரு சில நிமிடம் ஸ்தம்பத்தி போனது.
உலக கோப்பை வில்வித்தை தொடர் சீனாவின் ஷாங்காயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் 21 வயதான இந்தியாவின் தீபிகா குமாரி உலக சாதனையை சமன் செய்து அசத்தினார்.
மகளிர் ரீகர்வ் ரேங்கிங் சுற்றில் களமிறங்கிய தீபிகா, 686/720 புள்ளிகள் குவித்து தென் கொரியாவின் கி போபே படைத்த சாதனையை சமன் செய்து அசத்தினார். தீபிகாகுமாரி ஏற்கனவே ரியோ ரியோடிஜெனீரோ ஒலிம்பிக் போட்டியின் தனிநபர் மற்றும் குழு பிரிவில் தகுதி பெற்றுள்ளார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் ஏற்கனவே தொடர்ந்து நடந்த உலக கோப்பை வில்வித்தை தொடர்களில் வெள்ளிப் பதக்கம் மூன்று முறை 2011, 2012, 2013 வென்றுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.