Best Time For Walk in Morning: காலையில் நடைப்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் நடந்தால் தான் அது கலோரிகளை எரிக்க முடியும்.
Walking After Meal: சுவையான உணவு, சீரான உறக்கம். இதை எண்ணி மனம் மகிழாதவர்கள் யாரும் இருக்க முடியாது. உணவு உட்கொண்ட பிறகு சற்று களைப்பார படுத்துக்கொள்ளும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் இந்த ஒரு பழக்கம் உடலில் பல நோய்களை ஏற்படுத்தக்கூடும் என்பது பலருக்குத் தெரியாது. உடலை ஃபிட்டாக வைத்திருக்க ஆரோக்கியமான உணவு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு, உடல் முழுவதும் அந்த உணவு சென்று சேர்வதும் முக்கியமாகும். நாம் உண்ணும் உணவின் செரிமானம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடப்பது நல்லது.
உணவுக்குப் பிறகு சிறிது நேரம் நடப்பதால், உடலின் செரிமான அமைப்பு நன்றாக வேலை செய்யத் தொடங்குகிறது. உணவு சாப்பிட்ட பிறகு உங்களால் 15 முதல் 20 நிமிடங்கள் நடக்க முடிந்தால், அது இன்னும் பல நன்மைகளை அளிக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.