நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை போற்றி பாதுகாத்து, வளர்த்திட நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்று தமிழக முதல்வர் உலக தாய்மொழி தினத்தை யொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலத்தின் ஹோஸ்பேட் நகரத்திற்கு அருகே உள்ள ஹம்பி எனும் பழமையான கிராமம், சுற்றுலாவிற்கு ஏற்ற இடம் என பிரபல ஆங்கில பத்திரிகை நடத்திய ஆய்வில் பட்டியலிடப்பட்டுள்ளது!
யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் பாரம்பரிய இசை பங்களிப்புக்காக சென்னை இடம் பெற்றது.
யுனெஸ்கோ அமைப்பின் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் பாரம்பரிய இசை பங்களிப்புக்காக சென்னை இடம் பெற்றது. யுனெஸ்கோ அமைப்பானது கைவினைப் பொருள்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை, நகர வடிவமைப்பு, திரைப்படம், கேஸ்ட்ரானமி, இலக்கியம், ஊடகக் கலை மற்றும் இசை என 7 பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பு கொடுக்கும் நகரங்களை கிரியேட்டிவ் சிட்டீஸ் என்ற அங்கீகாரம் வழங்கி வருகிறது.
யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேற உள்ளதாக தெரிவித்துள்ளது!
ஐநா-வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றி வருவதாக அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் தற்போது யுனெஸ்கோவில் இருந்து விலகப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி அறிவிப்புக்கு அடுத்து இஸ்ரேலும் யுனெஸ்கோ-வில் இருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் செயல்பாடு குறித்து ‘யுனெஸ்கோ’ அளித்துள்ள அவலச் சான்றிதழ் பற்றி திமுக கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுளதாவது:-
மக்களின் தாகத்தைத் தணிப்பதற்கான குடிநீரைக் கூட முறையாக வழங்கும் நிர்வாகத் திறனற்றதாக உள்ள தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு, பாரம்பரியச் சின்னங்களான திருக்கோவில்களைப் பராமரிப்பதிலும் அலட்சியம் காட்டி, தமிழர்களின் பெருமை மிக்க வரலாற்று அடையாளங்களைச் சிதைத்து வருவதை ஐ.நா. அவையின் யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட இடைக்கால அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.