டில்லியில் நடந்த விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தார். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. மொத்தம் 339 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
இவர்களில் 23 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். நல்லாசிரியர் விருது, ரூ.50 ஆயிரம், வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழை உள்ளடக்கியது.
தேசிய நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் இந்த தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 23 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 21 பேர் தலைமை ஆசிரியர்கள்.
ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் இந்த விருது விழா நடைபெறும். அப்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நல்லாசிரியர் விருதுகளை ஆசிரியர்களுக்கு வழங்கி கவுரவிக்க உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.