ரூ.50 கோடிக்கும் மேலான வங்கிக் கடன்களைப் பெறுவதற்கு பாஸ்போர்ட் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதன் மூலம் கடன் வாங்கி மோசடி வழக்குகளில் சிக்கி கொள்பவர்கள் மீது விரைவில் நடவடிக்கைகள் எடுக்க முடியும் எனவும். வங்கியில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்வதையும் தடுக்க முடியும் என நிதிச்சேவைகள் செயலர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளர்.
நிரவ் மோடி, மெஹுல் சோக்சி, அவர்களுடன் தொடர்புடைய தனி நபர்கள், நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட, 64 பேர், தங்கள் சொத்துக்களை விற்க, என்.சி.எல்.டி., எனப்படும், தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம் தடை விதித்து உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.