வருமான வரித் துறையின் சமீபத்திய ஐடிஆர் தாக்கல் நிலை செய்தி வந்திருக்கிறது. 2020 டிசம்பர் 31 வரை, 2019-20 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை (ITR) 4.84 கோடி பேர் தாக்கல் செய்திருப்பதாக வருமான வரித்துறை (Income Tax Department) உறுதிப்படுத்தியுள்ளது.
வரி ஏய்ப்பு செய்பவர்களைக் கண்டுபிடிக்க ஐ-டி துறை ஒரு தேசிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி சுமார் 6,000 வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வருமான வரி (Income tax) செலுத்துவோர் வருமான வரித் துறையை ஏமாற்றுவது இனிமேல் கடினமாக இருக்கும்.
ITR) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஐந்தாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, மத்திய நேரடி வரி வாரியம், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் காலக்கெடுவை 2020, டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.
மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) (Central Information Commission (CIC)) நவம்பர் 18ஆம் தேதியன்று ஒரு முக்கிய முடிவை அறிவித்து பெண்களின் உரிமையை பாதுகாத்துள்ளது. தனது கணவரின் சம்பளத்தை அறிந்து கொள்ள மனைவிக்கு முழு உரிமை உண்டு என்றும் அது பற்றிய தகவல்களை தகவல் அறியும் உரிமை மூலம் பெறலாம் என்றும் ஒரு முக்கிய தீர்ப்பை Central Information Commission வழங்கியது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.