ஜூன் 1-ம் தேதி முதல் ஒரே நாடு! ஒரே வரி! விதிப்பு முறையான ஜிஎஸ்டி வரி நடைமுறை அமலுக்கு வந்தது.
இதையடுத்து ஒரே வரி விதிப்புக்கான நடைமுறைகளை மாநில அரசுகள் செயல்படுத்தத் தொடங்கியுள்ளன.
அதன் ஒரு பகுதியாக மாநில எல்லைகளில் உள்ள வணிக வரி சோதனை சாவடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிமுகமான முதலே தமிழ்நாடு - கேரளா, தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் சோதனை சாவடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. இதுவரை நூற்றுக்கணக்கான சோதனை சாவடிகள் தங்களது தினசரி பணியை நிறுத்தி விட்டன.
ஜிஎஸ்டி தொடர்பான தவறான புரிதல்களுக்கு மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா டிவிட்டரில் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஜிஎஸ்டி தொடர்பாக மக்களிடையே உள்ள தவறான புரிதல்கள் மற்றும் அவற்றுக்கான விளக்கங்களை ஹஷ்முக் ஆதியா அளித்துள்ளார்.
MYTHS & REALITIES on #GST
by Revenue Sec Shri @adhia03
Find Here pic.twitter.com/7WFPRvWZW3
பாராளுமன்ற மைய மண்டபத்தில் நள்ளிரவில் அறிமுக விழா சரக்கு, சேவை வரி அமலுக்கு வந்ததுநாட்டில் முதன் முதலாக, நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்க வகை செய்யும் ஜிஎஸ்டி இன்று நள்ளிரவு முதல் அமலானது.
பாராளுமன்றத்தில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் பிரதமர் நரேந்திர மோடியும் சேர்ந்து இதனை தொடங்கி வைத்தனர்.
ஜிஎஸ்டி தொடர்பான நான்கு துணை மசோதாக்களுக்கு இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கினார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
ராஜ்யசபாவில் இன்று பிற்பகல் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் பகல் 2 மணி முதல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி மசோதா குறித்து தனியார் டிவி ஒன்றிற்கு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பேட்டி அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.