கொரோனா காலத்துக்கு ஏற்ப மக்கள் ஆன்லைனில் அக்ஷய திரிதியை கொண்டாடியுள்ளார்கள் என்பதை தங்க விலை உயர்விலிருந்து கணிக்க முடிகிறது. ஆன்லைனில் சிலர் தங்கத்தை ஆர்டர் செய்ய, சிலரோ ஈ-தங்கத்தை வாங்கி சேர்த்தனர். முன்கூட்டிய ஆர்டர்கள் பல குவிந்ததாக நகை கடைக்காரர்கள் தெரிவித்தனர்.
நேர்மறையான எண்ணங்களுடன் கூடிய முயற்சி நிச்சயமாக நம்மை வாழ்வில் உயர்த்தும். முயற்சியே நம் முன்னேற்றத்திற்கான தாரக மந்திரம். விடாமுயற்சி நம்மை எப்போதும் கைவிடாது. இன்றைய பஞ்சாங்க குறிப்புகள் இதோ..
ஏப்ரல் 26 அன்று, அக்ஷயா திரிதியா (Akshaya Tritiya) என்பதால், தங்கத்தின் தேவை அதிகரிப்பதைக் காணலாம். தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெள்ளிக்கிழமை சந்தையில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ 315 அதிகரித்து 46,742 ரூபாயாக உள்ளது.
அட்சய திருதியை தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். இந்து புராணப்படி பரசுராமரின் பிறந்த நாளாகவும் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. "அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்றதால் தங்கம், வெள்ளி, கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.
அட்சயம் என்பதற்கு வளருதல் என்று பொருள். சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் திருதியை நாள் அட்சய திருதியை என்று அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை அன்று பொன், பொருள், பூமி, ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றில் ஒன்றை நல்ல நேரம் பார்த்து வாங்கினால், அது மென்மேலும் அபிவிருத்தியாகும் என்பது நம்பிக்கை.
அட்சய திருதியை வந்துவிட்டால் ஏதாவது ஒரு மங்களப் பொருளை வாங்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்த நாளில் தங்கம் வாங்கினால் சேரும் என்று நம்பிக்கையாக பரவிவிட்டது. அட்சய திருதியை பற்றி பல புராணக் கதைகள் உள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.