பிரபல இந்தி நடிகர் வினோத் கண்ணா (70) புற்றுநோய் காரணத்தால் காலமானார்.
கடந்த சில நாட்களாகவே உடல் நலக் குறைவு காரணமாக வினோத் கண்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் புற்றுநோய் பாதிப்பால் இந்தி நடிகர் வினோத் கண்ணா காலமானார்.
வினோத் கண்ணாவின் மறைவுக்கு இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
அவருடைய மறைவுக்கு ரஜினிகாந்த் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் நாளை வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பிரபல இந்தி நடிகர் வினோத் கண்ணா (70) புற்றுநோய் காரணத்தால் காலமானார்
இந்தி திரை உலகில் 1968-களில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தவர் வினோத் கண்ணா. வினோத் கண்ணா 1968-ம் ஆண்டு சுனில் தத் நடித்த மன் கா பிரீத் என்ற திரைப்படத்தில் வில்லனாக அறிமுகமானார்.
1997-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பஞ்சாபின் குர்தாஸ்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். அதே தொகுதியிலிருந்து 1999-ம் ஆண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.