தமிழக முதல்வர் அணிக்கு மாறுவதற்கு ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்களிடம் ரூ. 5 கோடி பேரம் பேசப்பட்டதாக தூத்துக்குடி எம்.எல்.ஏ சண்முகநாதன் இன்று கூறி இருந்தார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு தமிழகத்தில் அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணி, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் ஒரு அணி என்று பிரிந்துள்ளது.
கூவத்தூரில் எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டு இருந்தபோது, சசிகலா அணிக்கு மாறுவதற்கு லஞ்சம் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, டைம்ஸ் நவ் சிறப்பு செய்தியும் வெளியிட்டு இருந்தது.
தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து பிரதமர் அவர்களிடம் எடுத்துக் கூறியதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இன்று பிரதமரை நேரில் சந்தித்து அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து பிரதமர் திரு @narendramodi அவர்களிடம் எடுத்துக் கூறினோம்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில், தனது அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவு கேட்பதற்காக இன்று காலை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார்
ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
இரண்டாகப் பிளவுபட்டுள்ள அ.தி.மு.க-வில், அதிமுக புரட்சிதலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனனும், அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரனும் போட்டியிடுகின்றனர். இரு அணியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை அலங்காநல்லூரில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக ஜல்லிக்கட்டு ரத்து செய்யப்பட்டது.
பொதுமக்களை சமரசம் செய்ய இயலாத அதிருப்தியுடன் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மதுரை மாவட்ட கலெக்டர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசன நடத்தினார்.
பின்னர், மதுரையில் இருந்து இன்று பிற்பகல் விமானம் மூலம் சென்னை வந்த தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவசர சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கான தடை முற்றிலுமாக நீங்கியுள்ளதாக குறிப்பிட்ட அவர், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான சட்ட முன்வரைவு நாளை சட்டசபையில் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாததால் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சென்னை திரும்பவுள்ளார்.
அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டை முதல்வர் ஓ.பி.எஸ்., துவக்கி வைப்பதாக இருந்தது. ஆனால் ஓ.பி.எஸ்., வந்தால் அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். மேலும் நிரந்தர சட்டம் இயற்றும் வரை நாங்கள் போராட்டத்தை கைவிடுவதில்லை என அறிவித்துள்ளனர்.
மதுரையில் இன்று நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று மாலை மதுரைக்கு பயணம் மேற்கொண்டார்.
ஜல்லிக்கட்டுக்கு கடந்த 2 ஆண்டுகளாக நீடித்த தடை, தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தால் நேற்று உடைந்தது. இதனால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு மெரினா மற்றும் மதுரையில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என அவர்கள் தெரிவித்துள்ளனர். மதுரை போராட்டக்களத்தில் இருந்த ஒரு பெண் கூறுகையில்; எங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், இந்த பொங்கலை சிறப்பாக கொண்டாட போவதாகவும் இது மிக மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
மதுரையில் நாளை நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை மதுரைக்கு பயணம் மேற்கொள்வார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கிலும் தமிழர்கள் மாபெரும் புரட்சியில் ஈடுப்பட்டுவருகின்றனர். இந்தநிலையில் மாநில அரசு விலங்குகள் வதை தடுப்புச்சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அவசர சட்டத்தை ஓப்புதலுக்காக அனுப்பியது.
மதுரையில் நாளை நடைபெற இருக்கும் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை மதுரைக்கு பயணம் மேற்கொள்வார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் மட்டுமல்லாது உலகெங்கிலும் தமிழர்கள் மாபெரும் புரட்சியில் ஈடுப்பட்டுவருகின்றனர். இந்தநிலையில் மாநில அரசு விலங்குகள் வதை தடுப்புச்சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு அவசர சட்டத்தை ஓப்புதலுக்காக அனுப்பியுள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மாணவ சமுதாயம் ஒட்டுமொத்தமாக போராட்டக் களத்தில் குதித்தது. இளைஞர்களும், பெண்களும் இணைந்து நடத்தி வரும் இந்தப் போராட்டம் டெல்லி வரை அதிர்வுகளை ஏற்படுத்தியது. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் திகைத்துப் போன மாநில அரசும், மத்திய அரசும் ஆலோசனைகளையும் நடத்தின. தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று டெல்லி விரைந்தார். அங்கு பிரதமரைச் சந்தித்தார் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை குறித்து பேசினார். பிறகு சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு வசதியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாகவும், ஓரிரு நாளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்றும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டை ஆதரித்தும் அலங்காநல்லூரில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் சென்னை மெரினா கடற்கரை அருகே நேற்று காலையிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக முன்னாள் முதல்வர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளையொட்டி மத்திய அரசு சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதி இருந்தார்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார்.
சந்திப்புக்கு முன்பு பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று நாளை திமுக போராட்டம் நடத்துகிறது. எதிர்க்கட்சி என்ற முறையில் போராடுகிறார்கள். போராட்டம் நடத்தித்தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியுமென்றால் நானும், பா.ஜனதாவும் முதலாவதாக போராடுவோம். ஆனால் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.