ஐ.எஸ்., பயங்கரவாத தலைவர் பாக்தாதி கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவனாக இருந்த அபு பக்கர் அல் பாக்தாதி. இவர் ஐ.எஸ் தீவிரவாதிகளை வழி நடத்துகிறான். ரஷ்ய நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, கடந்த மே 28 அன்று ரஷ்யா நடத்திய விமானப்படை தாக்குதலில் அபு பக்கர் அல் பாக்தாதி மற்றும் அவனுடன் இருந்த முக்கிய பயங்கரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. ஆனால் இதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
பிரிட்டன் பார்லிமென்ட் அட்டாக் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பு
பிரிட்டன் பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் பார்லிமென்ட் வாளகம், வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் அருகே நேற்று மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியானதாகவும் 40 பேர் காயமடைந்ததாகவும், அதில் 29 பேர் மருத்துவமானையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தோல்வியை ஒப்புக்கொண்ட அந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி
உலகை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பல்வேறு தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர். தங்களின் அமைப்புகளை உலகம் முழுவதும் நிறுவுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். மேற்காசிய நாடுகளான சிரியா மற்றும் ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பிற்கு எதிராக ஈராக் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. ஈராக்கிற்கு உதவியாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த மொசூல் நகரம் மீண்டும் ஈராக் ராணுவ வசமானது
துபாயில் இருந்து கோழிக்கோடு சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் ஐ.எஸ். ஆதரவு கோஷங்களை எழுப்பியதால் விமானமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.