இன்று இரட்டைஇலை விவகாரம் தொடர்பாக இறுதி விசாரணை நடைபெற உள்ள நிலையில் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
I will contest in #RKNagar bypoll: TTV Dhinakaran in Chennai pic.twitter.com/rrN3WwXNL7
— ANI (@ANI) October 23, 2017
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில காவல்துறை தான் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.88 கோடி வழங்கப்பட்டதற்கான ஆவணங்களை வருமான வரித் துறை கைப்பற்றியுள்ளதாக நேற்று மாலை செய்திகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக தனி தேர்தல் அதிகாரி விக்ரம்பத்ரா நேற்று மாலை அவசரமாக டெல்லி சென்றார். இன்று தலைமை தேர்தல் அதிகாரி லக்கானி சந்தித்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதித்து வருகின்றார்.
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீடு, தனியார் விடுதி உட்பட பல இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர்.
மருத்துவமனையில் மேற்கொண்ட சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பிய விஜயகாந்த், இன்று ஆர்.கே.நகரில் பிரசாரம் செய்கிறார்.
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ப.மதிவாணனை ஆதரித்து 9-ம் தேதி(ஞாயிற்றுகிழமை) மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை வாக்காளப் பெருமக்களை சந்தித்து முரசு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று 38, 39, 40, 41, 42, 43, 47 ஆகிய வட்டங்களில் வீதி, வீதியாக கழக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தொடங்கியுள்ளார்.
ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 16-ம் தேதி துவங்கி 23-ம் தேதி வரை நடைபெற்றது. ஏப்ரல் 15-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
அதிமுக அம்மா கட்சி சார்பில் ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார்.
அதிமுக அம்மா கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்:-
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் இன்று வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. அதற்கு வருகிற ஏப்ரல் 12-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், திமுக சார்பில் மருது கணேஷ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருது கணேஷ் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். இதற்க்கு முன்னதாக, திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து அவரிடம் ஆசி பெற்றார்.
ஆர்கேநகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
கடந்த 22 நாட்களாக நெடுவாசலில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், மாணவர்களின் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதை கருதி தற்போது போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் முடிவு அடையும் நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன.
ஆர்கேநகர் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள தீபா வேட்புமனுத் தாக்கலை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளார்.
கடந்த டிசம்பர் 5-ம் தேதி தமிழகத்தின் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதையடுத்து ஆர்கேநகர் தொகுதி காலியாக இருந்தது.
கடந்த 3 மாதமாக காலியாக இருந்த இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் முடிவு அடையும் நிலையில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் தீவிரம் காட்டி வருகின்றன.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் 16-ம் தேதி துவங்கியது.
ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இன்று திடீரென ரஜினியைச் சந்தித்த கங்கை அமரன்
பாரதீய ஜனதா சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் இசையமைப்பாளர் கங்கை அமரன் இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
சென்னையில் உள்ள நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்று கங்கை அமரனுக்கு திடிரென வரை சந்தித்தார். மேலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் கங்கை அமரனுக்கு வாழ்த்து தெரிவித்தார் என கூறப்படுகிறது.
கங்கை அமரன் இரு ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எதிர்க்கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக மட்டும் செயல்படுகிறது என்று கூறியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஆர்கேநகர் தேர்தல் அதிகாரி பத்மஜா தேதி மாற்றப்பட்டார். பத்மஜா தேவிக்கு பதிலாக ஆர்கேநகர் தேர்தல் அதிகாரியாக பிரவீன் நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“குற்றவாளி” வழிகாட்டுதலில் செயல்படும் பினாமி அரசின் நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையில் அழிக்க முடியாத கரும்புள்ளியை வைத்து விட்டார்.
பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஜெயக்குமாருக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“குற்றவாளி” வழிகாட்டுதலில் செயல்படும் பினாமி அரசின் நிதியமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்யும் நடைமுறையில் அழிக்க முடியாத கரும்புள்ளியை வைத்து விட்டார்.
ஆர்.கே. நகரில் ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுவார் என்று ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி சார்பில் தினகரன் போட்டியிடுகிறார். ஜெ., அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடுகிறார். திமுக சார்பாக மருது கணேஷ் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் ப.மதிவாணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியும் இந்த தொகுதியில் போட்டியிடும் என அறிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.