திமுக-வின் மாதிரி சட்டப்பேரவை கூட்டம்: ஸ்டெர்லைட்க்கு எதிரான தீர்மானம்!

அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் நடத்தப்பட உள்ள மாதிரி சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது.

Last Updated : May 30, 2018, 05:17 PM IST
திமுக-வின் மாதிரி சட்டப்பேரவை கூட்டம்: ஸ்டெர்லைட்க்கு எதிரான தீர்மானம்! title=

அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் நடத்தப்பட உள்ள மாதிரி சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. இந்த மாதிரி சட்டப்பேரவையின் சபாநாயகராக சக்கரபாணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   

அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி வழங்கும் தீர்மானத்தை மு.க. ஸ்டாலின் தற்போது கொண்டுவந்தார். இதையடுத்து, ஸ்டெர்லைட்க்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்தார். இதில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர். 

முன்னதாக, நேற்று நடைபெற்ற தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு கண்டனம் மற்றும் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்புச் சட்டயணிந்து அவை நிகழ்வில் பங்கேற்றனர்.

மேலும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து திமுக விவாதம் செய்தது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்று கேட்டுக்கொண்டதையடுத்து, திமுகவின் சட்டசபை ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் நிராகரித்தார். இதையடுத்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Trending News