IPL 2018: பஞ்சாப் அணி 4-ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி!!

IPL 2018 தொடரின் 11-வது லீக் போட்டியில் கடைசி ஓவரில் அசத்திய பஞ்சாப் அணி, 4 ரன் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி 'திரில்' வெற்றி பெற்றது. 

Last Updated : Apr 16, 2018, 08:12 AM IST
IPL 2018: பஞ்சாப் அணி 4-ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி!! title=

IPL 2018 தொடரின் 11-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது.

இதனையடுத்து, பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 197 ரன்கள் குவித்தது. சென்னை அணி சார்பில் ஷர்துல் தாகூர், இம்ரான் தாகிர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதையடுத்து, 198 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில், 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்களே எடுக்க முடிந்தது. 

இதன் மூலம் 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றியை பெற்றது. 

பஞ்சாப் அணியின் தரப்பில் ஆன்ட்ரூ டை 2 விக்கெட்டுகளையும், மோகித் சர்மா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றிருந்தனர். 

இந்நிலையில், நாளை நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணியை ஈடன் கார்டென்ஸ் மைதானத்தில் எதிர்கொள்கிறது. 

Trending News